Bathroom Floor Cleaning Tips in Tamil
பொதுவாக நாம் வாழும் வீட்டினை சுத்தமாக பராமரித்தால் மட்டுமே நமது ஆரோக்கியத்தில் எந்தவித பிரச்சனையும் இருக்காது. அதிலும் முக்கியமாக நமது வீட்டில் உள்ள பாத்ரூம்களை சுத்தமாக பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் அதனை சுத்தமாக பராமரிப்பது என்பது நாம் அனைவருக்குமே மிகவும் கடினமான ஒரு செயலாகும். அதிலும் பாத்ரூமில் உள்ள தரை மற்றும் சுவர்களில் படிந்து உள்ள உப்பு கறைகளை போக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகும். அதற்காக தான் இன்றைய பதிவில் பாத்ரூமில் உள்ள தரை மற்றும் சுவர்களில் படிந்து உள்ள உப்பு கறைகளை போக்குவதற்கான உதவும் ஒரு டிப்ஸினை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Bathroom Floor Uppu Karai Poga Tips in Tamil:
பொதுவாக நமது வீடுகளில் மிக மிக சுத்தமாக வைத்திருக்க வேண்டிய இடங்கள் அது சமையல் அறை மற்றும் பாத்ரூம் ஆகும். இதில் பாத்ரூம் தரை மற்றும் சுவர்களில் படிந்து உள்ள உப்பு கறைகளை போக்குவதற்கான உதவும் ஒரு டிப்ஸினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- பாத்திரம் கழுவும் பொடி – 4 டேபிள் ஸ்பூன்
- வினிகர் – 1/2 கப்
- தயிர் – 6 டேபிள் ஸ்பூன்
- பேக்கிங் சோடா – 3 டேபிள் ஸ்பூன்
வெறும் 10 நிமிடத்தில் சிங்க் தொட்டியின் அடைப்பை போக்க இதை ட்ரை பண்ணுங்க
செய்முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் பாத்திரம் கழுவும் பொடி மற்றும் 1/2 கப் வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 6 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
பின்னர் அதனை உங்களின் பாத்ரூமின் தரை மற்றும் சுவர்களில் எங்கெல்லாம் உப்பு கறைகள் உள்ளதோ அங்கெல்லாம் தெளித்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு தொடப்பத்தை பயன்படுத்தி நன்கு தேய்த்து ஒரு 1/2 மணிநேரம் கழித்து கழுவிக் கொள்ளுங்கள்.
இந்த டிப்ஸினை ஒரு முறை செய்து பாருங்கள் உங்கள் பாத்ரூமின் தரைகளில் உள்ள அனைத்து உப்பு கறைகளும் நீங்கிவிடும்.
கிச்சனில் படிந்துள்ள எண்ணெய் பிசு பிசுப்பை நிமிடத்தில் போக்க எலுமிச்சை பழம் போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |