Bathroom Freshener Ideas in Tamil
பொதுவாக அனைவருடைய வீட்டிலும் பாத்ரூம் சுத்தம் செய்தல் மற்றும் துர்நாற்றம் வீசாமல் இருக்க செய்தல் என்பது மிகவும் கடினமான வேலை. இந்த இரண்டு வேலையும் செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். இதற்கு என்று ஒரு சிலருக்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் நிலைமையும் ஏற்பட்டு இருக்கும். அதனால் உங்களுடைய நேரத்தை சேமிக்கவும் மற்றும் நீங்கள் கஷ்டப்படாமல் இருக்கும் இன்றைய பதிவு மிகவும் உதவியானதாக இருக்கும். இன்றைய டிப்ஸ் பதிவில் வீட்டில் இருக்கும் ஒரே ஒரு பவுடரை பயனபடுத்தி பாத்ரூமில் பூச்சிகள் மற்றும் துர்நாற்றம் வராமலும் இருப்பதற்கும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ வீட்டை சுத்தம் செய்வதற்கு இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் ..!
How to Make Bathroom Freshener at Home in Tamil:
பாத்ரூமில் துர்நாற்றம் வீசாமல் மற்றும் பூச்சிகள் வராமல் இருப்பதற்கான டிப்ஸினை பற்றி பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருட்கள் :
- சமையல் சோடா- 1 ஸ்பூன்
- முகப் பவுடர்- 1 ஸ்பூன்
- சூடம்- 4
- கம்போர்ட்- 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் 1 ஸ்பூன் சமையல் சோடா மற்றும் முகத்திற்கு பயன்படுத்தும் வாசனை உள்ள பவுடர் 1 ஸ்பூன் போட்டு இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
அடுத்து எடுத்துவைத்துள்ள சூடத்தை பவுடர் போல செய்து அதனை கலந்து வைத்துள்ள பவுடருடன் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள்.
இப்போது கலந்து வைத்துள்ள பவுடருடன் கம்போர்ட் 1 ஸ்பூன் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போல பிசைந்து சிறு சிறு உருண்டையாக எடுத்து வடை போல் செய்து 5 நிமிடம் வெயிலில் வைத்து கொள்ளுங்கள்.
5 நிமிடம் கழித்து அந்த மாவினை எடுத்து ஓடோனில் Air Box-ல் வைத்து மூடிவிடுங்கள். இப்போது ரூம் பிரஷர் ரெடி.
அதன் பிறகு நீங்கள் தயாரித்த ரூம் பிரஷரை பாத்ரூம் மற்றும் மற்ற ரூம்களிலும் மாட்டி விடுங்கள். இந்த ரூம் பிரஷரின் ஓட்டையில் இருந்து வரும் காற்றினால் உங்களுடைய வீட்டில் எப்போதும் துர்நாற்றம் வீசாது மற்றும் பூச்சிகளும் வராது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |