Bathroom Freshener in Tamil
பொதுவாக அனைவரது வீட்டில் உள்ள பாத்ரூமை சுத்தமாக வைத்திருந்தாலும் கூட அவற்றில் இருந்து நாற்றம் வந்துகொண்டு தான் இருக்கும். பாத்ரூமில் நாற்றம் வீசக்கூடாது என்பதற்காக கடைகளில் விற்கப்படும் வாசனை பொருட்களை வாங்கி வந்து நமது பாத்ரூமில் மாட்டிவிடுவோம். இருப்பினும் அதில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் தான் வாசனை வரும். திரும்ப கடைகளில் அதனை வாங்க வேண்டியதாக இருக்கும். இனி இதற்காக நீங்கள் தனியாக செலவு செய்ய வேண்டாம். செலவே இல்லாமல் உங்கள் வீட்டு பாத்ரூம் 24 மணி நேரமும் வாசனையாக இருக்க ஒரே ஒரு பொருள் மட்டும் போதும். அதனை பயன்படுத்தி உங்கள் வீட்டு பாத்ரூமை 24 மணி நேரமும் நறுமணத்துடன் வைத்துக்கொள்ளலாம். சரி வாங்க அது என்ன பொருள், எப்படி அதனை பயன்படுத்து வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
பாத்ரூமில் நறுமணம் வீச டிப்ஸ்
தேவையான பொருட்கள்:
- பேக்கிங் சோடா – இரண்டு ஸ்பூன்
- முகத்திற்கு போடும் பவுடர் அல்லது கிரீம் – இரண்டு ஸ்பூன்
- கம்ஃபோர்ட் – ஒரு டேபிள் ஸ்பூன்
- கம் – தேவையான அளவு.
செய்முறை:
ஒரு சிறிய டப்பாவில் பேக்கிங் சோடா இரண்டு ஸ்பூன், முகத்திற்கு போடும் பவுடர் இரண்டு ஸ்பூன், கம்ஃபோர்ட் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் தேவையான அளவு கம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொடுக்க வேண்டும்.
பின் உங்களை கைகளை பயன்படுத்தி அவற்றை நன்றாக பிசைய வேண்டும் உதாரணத்திற்கு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு பிசையும்போது நமக்கு ஒரு உருண்டை கிடைக்கும். அதை லேசாக கட்லெட் போல ஒரு அழுத்தம் கொடுத்து, தட்டி ஒரு தட்டில் வைத்து வெயிலில் ஒரு நாள் முழுவதும் காய வைக்க வேண்டும்.
மறுநாள் அதனை பார்க்கும்போது சோப்பு கட்டி மாறி நமக்கு ஒரு கட்டி கிடைத்திருக்கும். இதிலிருந்து நல்ல நறுமணம் வெளிவரும். இதே போல இரண்டு மூன்று கூட தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.
மெலிதாக இருக்கக்கூடிய டிஷ்யூ பேப்பர் அப்படி இல்லை என்றால் மெலிதான துணி பையை சதுர வடிவில் வெட்டி, அதில் நீங்கள் தயார் செய்த சோப்புக்கட்டியை வைத்து ஒரு நூல் போட்டு கட்டி ஏதாவது ஒரு ஆணியல் பாத்ரூமில் தொங்க விட்டு விடுங்கள். இதிலிருந்து லேசான நல்ல நறுமணம் பாத்ரூம் முழுவதும் எப்போதும் வீசிக்கொண்டே இருக்கும். இது அவ்வளவு சீக்கிரத்தில் வாசனையை இழக்காது. கரைந்தும் போகாது. ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 இதை ட்ரை பண்ணுங்க இவ்ளோ நாள் டாய்லெட் கஷ்டப்பட்டு கிளீன் பண்ணோம்னு யோசிப்பாங்க..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tips in Tamil |