Bathroom Pipe Cleaning Tips in Tamil
நாம் அனைவருமே மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அதற்கு நாம் வாழும் இடங்கள் மற்றும் நமது சுற்றுப்புறங்களையும் மிகவும் சுத்தமாக பராமரித்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக நாம் வாழும் வீட்டினை மிக மிக கவனமாக சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இங்கு தான் நாம் அதிக நேரத்தை செலவழிக்கின்றோம். அதிலும் குறிப்பாக நமது வீட்டின் பாத்ரூம் மற்றும் கிட்சன் பகுதியை மிகவும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இங்கு தான் அதிக அளவு அசுத்தங்கள் சேரும். அதனால் தான் இன்றைய பதிவில் பாத்ரூம் உள்ள பைப்புகளில் நீண்ட நாட்களாக படிந்துள்ள உப்பு கறைகள் மற்றும் விடாப்பிடி கறைகளை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Tips for Bathroom Pipe Cleaning in Tamil:
நமது வீட்டில் உள்ள பாத்ரூம் உள்ள பைப்புகளில் நீண்ட நாட்களாக படிந்துள்ள உப்பு கறைகள் மற்றும் விடாப்பிடி கறைகளை 5 நிமிடத்தில் போக்க ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
அதற்கு முன்னால் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.
- உப்பு (Salt) – 1 கைப்பிடி அளவு
- சலவைத்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- பேக்கிங் சோடா – 1 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை பழம் – 1
- தண்ணீர் – 1 டேபிள் ஸ்பூன்
நீண்ட நாட்களாக பாத்ரூம் கதவுகளில் படிந்துள்ள உப்பு கறைகளை வெறும் 10 நிமிடத்தில் போக்கிவிடலாம்
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 1 கைப்பிடி அளவு உப்பு (Salt), 2 டேபிள் ஸ்பூன் சலவைத்தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை பழசாற்றினை சேர்த்து கொள்ளவும்:
பின்னர் அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு சாற்றினை மட்டும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
தண்ணீரை கலந்து கொள்ளவும்:
இறுதியாக அதில் 1 டேபிள் ஸ்பூன் தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இந்த கலவையை உங்கள் வீட்டில் உள்ள பத்துரூம் பைப்புகளில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் அப்படியே விடுங்கள்.
அதன் பிறகு லேசாக தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவினீர்கள் என்றால் அந்த பைப்புகளில் இருந்த அனைத்து கறைகளும் சட்டுன்னு நீங்கி விடும்.
பாத்ரூமை இதை விட யாரும் ஈஸியா கிளீன் செய்ய முடியாது
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |