பாத்ரூம் கிளீனுக்கும், வாசனைக்கும் பாட்டி சொன்னது என்னனு தெரியுமா.?

Advertisement

பாத்ரூம் கிளீன் செய்ய 

பாத்ரூம் கிளீன் செய்வது ரொம்ப கஷ்டமான வேலையாக இருக்கிறது. தினமும் பாத்ரூம் கிளீன் செய்தால் பளிச்சென்று இருக்கும். ஆனால் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இதனால் அவர்களால் வீட்டை கவனிக்க முடியவில்லை. வாரத்தில் ஒரு நாள் தான் கிளீன் செய்ய முடிகிறது. அதற்குள் பாத்ரூம் நாறிவிடுகிறது. மேலும் பாத்ரூம் கிளீன் செய்வதற்காக கடையில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் பாத்ரூம் கிளீன் செய்வதற்காக வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்த போகிறோம். அது என்னென்ன பொருட்கள் அதனை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பாத்ரூம் கிளீன் செய்வது எப்படி.?

பாத்ரூம் கிளீன் செய்வது எப்படி

பாத்ரூம் கிளீன் செய்ய துணி துவைக்க பயன்படுத்தும் பவுடரை எடுத்து கொள்ளவும். இந்த பவுடரை பாத்ரூமில் தெளித்து விட்டு வார்கோலை பயன்படுத்தி தேய்த்து விட்டு 1 மணி நேரம் அப்படியே விடவும். அதன் மேலே பேக்கிங் சோடாவையும் தூவி விட்டு தேய்த்து விடவும்.

பாத்ரூமில் படிந்திருக்கும் கரையை 15 நிமிடத்தில் போக்க தேயிலை மர எண்ணெய் போதும்…

ஒரு மனை நேரம் கழித்து வார்கொலை பயன்படுத்தி தேய்த்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு கழுவி விடவும். இது போல் நீங்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தாலே பாத்ரூம் பளிச்சென்று மாறிவிடும்.

பாத்ரூம் எப்போதும் வாசனையாக இருக்க:

பாத்ரூம் எப்போதும் வாசனையாக இருக்க என்ன செய்ய வேண்டும் 

பாத்ரூமை ஒரு நாள் கிளீன் செய்யாமல் விட்டாலும் வீடு நாறிவிடும். இதை தவிர்த்து பாத்ரூம் வாசனையாக இருக்க வீட்டு குறிப்பை தெரிந்து கொள்ள போகிறோம்.

ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா பாதி டப்பா வரைக்கும் சேர்த்து கொள்ளவும். அதனுடன் Fabric softener beads சிறிதளவு, பேபி ஆயில் சிறிதளவு, கிராம்பு 15 சேர்த்து நன்றாக கலந்து விடவும். இதனை பாத்ரூமில் வைத்து விடவும்.

கிராம்பு மற்றும் பேபி ஆயில் போன்றவை பாத்ரூமை வாசனையாக வைத்திருக்க உதவுகிறது. இதனை 10 நாட்களுக்கு மாற்றி விடவும்.

வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கா..! அப்படினா இதை செய்யுங்க..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement