பாத்ரூம் எப்போதும் வாசனையாக இருக்க 5 நிமிடம் இதை செய்தால் போதும்..

Advertisement

பாத்ரூம் வாசனையாக இருக்க

இன்றைய காலத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இதனால் வீட்டை அவர்களால் சரியாக பராமரிக்க முடிவதில்லை. வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருக்கும் போது தான் வீட்டை சுத்தம் செய்கிறார்கள். ஒருவர் வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் வீட்டின் பாத்ரூம் மற்றும் கிட்சனை பார்த்தாலே தெரியும். பாத்ரூமை கிளீன் செய்யலாமல் இருந்தாலும் கடையில் விற்கும் பொருட்களை வாங்கி பாத்ரூம் வாசனைக்காக மாட்டுவார்கள். இவை நிரந்தரமானதாக இருக்காது. ஏனென்றால் கொஞ்ச நாளைக்கு மட்டும் தான் அதனின் வாசனை இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருளை பயன்படுத்தி பாத்ரூமை எப்படி வாசனையாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பாத்ரூம் எப்போதும் வாசனையாக இருக்க:

பாத்ரூம் வாசனையாக இருக்க டூத் பேஸ்ட்

முதலில் பாத்ரூம் வாசனையாக இருப்பதற்கு ரெமிடிகளை பார்ப்பதற்கு முன் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்க வீட்டில் குளியலறை மற்றும் டாய்லெட் இரண்டுமே ஒன்றாக இருந்தால் கவனிக்க வேண்டியது. ஈர துணிகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஈர துணிகளை அப்படியே போட்டு விட்டு அறையை மூடினால் நாற்றம் இருந்து கொண்டு தான் இருக்கும்.

அடுத்து நீங்கள் பாத்ரூமை கிளீன் செய்யும் போது நான்கு மூலைகளையும் சுத்தமாக கிளீன் செய்ய வேண்டும்.

பாத்ரூமில் படிந்திருக்கும் கரையை 15 நிமிடத்தில் போக்க தேயிலை மர எண்ணெய் போதும்…

பாத்ரூம் வாசனையாக இருக்க டூத் பேஸ்ட்:

பாத்ரூம் வாசனையாக இருக்க டூத் பேஸ்ட்

பாத்ரூம் வாசனையாக இருப்பதற்கு வீட்டில் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட் மட்டும் போதும். டூத் பேஸ்ட்டை வெஸ்டன் டாய்லெட்டில் இருக்கும் வாட்டர் டேங்கில் போட வேண்டும்.

நீங்கள் வெஸ்டன் டாய்லெட்டை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் நீங்கள் பிரஸ் செய்யும் போது வாசனையாக இருக்கும்.

இல்லையென்றால் பேக்கிங் சோடாவை பயன்படுத்தி பாத்ரூமை கிளீன் செய்து விட்டு வெஸ்டன் டாய்லெட்டில் உள்புறம் போட 1 தேக்கரண்டி போட வேண்டும். இப்படி செய்வதால் நீங்கள் பிரஸ் செய்யும் போது அழுக்குகளும் இருக்காது, வாசனையாக இருக்கும்.

வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கா..! அப்படினா இதை செய்யுங்க..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement