Bathroom Smell Remover Tips in Tamil
பொதுவாக நாம் நம்முடைய வீட்டில் இருந்தாலும் சரி, இல்லாமல் இருந்தாலும் சரி வீடு எப்போதும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். ஆனால் என்ன தான் நாம் சுத்தம் செய்து வந்தாலும் கூட அது நறுமணத்துடன் இருப்பது இல்லை. எந்த நேரமும் பயன்படுத்தி கொண்டிருக்கும் வீடே இப்படி இருக்கும் பட்சத்தில் பாத்ரூம் எந்த நிலையில் இருக்கும் என்ற எண்ணம் நமக்கு தோன்றும். ஆகவே இதனை நாம் நினைத்து தான் தினந்தோறும் வீட்டை சுத்தம் செய்து கொண்டு வருவோம். ஆனால் எத்தனை முறை பாத்ரூமை சுத்தம் செய்தாலும் கூட பாத்ரூமில் துர்நாற்றம் என்பது வீசி கொண்டு தான் உள்ளது. சரி இதனை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கும் பொருளை வாங்கி பயன்படுத்துவீர்கள். இனி உங்களுக்கு இதுபோன்ற கஷ்டம் எதுவும் இல்லாமல் பாத்ரூமில் வீசும் துர்நாற்றத்தை எப்படி நீக்குவது என்பதற்கான டிப்ஸினை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பாத்ரூம் துர்நாற்றம் நீங்க டிப்ஸ்:
டிப்ஸ்- 1
- தண்ணீர்
- பூண்டு
இப்போது ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு கொதித்த தண்ணீரில் 2 முதல் 3 பற்கள் பூண்டை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.
அதன் பிறகு 15 நிமிடம் கழித்து கொதிக்க வைத்துள்ள தண்ணீரை பாத்ரூமில் ஊற்றி விட்டு அப்படியே இரவு முழுவது விட்டு விடுங்கள். மறுநாள் காலையில் வழக்கமாக பாத்ரூம் சுத்தம் செய்வது போல சுத்தம் செய்து விடுங்கள்.
இவ்வாறு செய்தால் போதும் எப்பேர்ப்பட்ட துர்நாற்றமும் இல்லாமல் இருக்கும்.
கேஸ் பர்னர் புதுசு போல மின்ன வெறும் இரண்டு பொருட்கள் போதும் |
டிப்ஸ்- 2
இரண்டாவது டிப்ஸிற்கு நமக்கு தேவைப்படும் பொருளும் பூண்டு மட்டுமே ஆகும். ஆகையால் 2 பற்கள் பூண்டை எடுத்துக்கொண்டு அதனை கொஞ்சமாக நசுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு நசுக்கி வைத்துள்ள பூண்டை பாத்ரூமில் போட்டு அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்த பிறகு பாத்ரூமை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
இப்படி செய்வதன் மூலம் பாத்ரூமில் துர்நாற்றமும் இருக்காது மற்றும் மஞ்சள் நிறம் படிந்த கறையும் இருக்காது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2 நிமிடத்தில் புளித்த மாவை புதிய மாவு போல் ஆக்கலாம்
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |