பாத்ரூம் வாசனையாக இருக்க
உங்கள் வீடு வாசனையாக இருக்க வேண்டும் என்றால் பாத்ரூம் வாசனையாக இருக்க வேண்டும். தினமும் பாத்ரூமை கிளீன் செய்தாலும் நாற்றம் வந்து கொண்டே இருக்கும். இதற்காக கடையில் விற்கும் லீகுய்டுகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இனிமேல் பாத்ரூம் வாசனைக்காக காசு கொடுத்து லீகுய்டுகளை வாங்க தேவையில்லை. ஏனென்றால் இந்த பதிவில் பாத்ரூம் வாசனையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
பாத்ரூம் வாசனைக்கு லீகுய்டு செய்முறை:
பார் சோப்பை எடுத்து நன்றாக துருவி ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்க்கவும். பின் அதனுடன் ஒரு மூடி கம்போர்ட், துணி பவுடர் 1/4 கப், துருவிய Toilet Gel ஒரு கட்டி ஆகியவற்றை சேர்க்கவும்.
பின் அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அவற்றில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தும் கரையும் வரை கொதிக்க விடவும். கொதிக்கும் போது கலவையை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கலவை நன்கு கரைந்த பிறகு அடுப்பை Off செய்து விடுங்கள்.
இதனை இரண்டு பாக்ஸில் சேர்த்து எடுத்து கொள்ளுங்கள். பின் மறுநாள் காலை அந்த பாக்ஸை பார்த்தால் அவற்றில் உள்ள பொருட்கள் அனைத்தும் இறுகி ஒரு சோப் கட்டி போன்று இருக்கும். அதனை தனியாக எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
இவ்வாறு நறுக்கிய துண்டுகளில் ஒன்றை எடுத்து வெஸ்டன் டாய்லட்டுக்கு பக்கத்தில் இருக்கும் தண்ணீர் டேங்கில் போடவும். பிறகு 15 நிமிடம் காத்திருக்கவும்.
பிறகு நீங்கள் ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் அதனை பிரஸ் செய்யும் போது அந்த தண்ணீருடன் நாம் தயார் செய்து வைத்த கலவையையும் கலந்து ஒரு அருமையான வாசனையுடன் வரும்.
வாரத்தில் ஒரு முறை மட்டும் சோப் கட்டிகளை சேர்த்து விடவும். இது போல் செய்து வந்தால் உங்கள் பாத்ரூம் வாசனையுடன் இருக்கும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |