பாத்ரூம் டைல்ஸ் கிளீனிங்
நீங்கள் பாத்ரூமை தினமும் சுத்தம் செய்தாலும் பழையது போல தான் இருக்கும். பழசு மாதிரி இருப்பது போல பிரச்சனை இல்லை. பாத்ரூம் டைல்ஸ் ஆக இருந்தாலும் சரி, சிமெண்ட் தரையாக இருந்தாலும் சரி நாளடைவில் வழவழப்பு தன்மை ஏற்படும். இதனை சரி செய்வதற்கு வீட்டில் உள்ள கோலமாவு மட்டும் போதும். எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்வது எப்படி.?
கோலமாவு:
அனைவரும் வீட்டிலும் கோலமாவு கண்டிப்பாக இருக்கும். பாத்ரூம் டைல்ஸ் கொஞ்சம் ஈரமான நிலையில் கோலமாவை டைல்ஸ் முழுவதும் தூவி விடுங்கள். ஒரு அரை மணி நேரம் கழித்து பிரஸ் அல்லது வார்கொல் வைத்து தேய்த்து விட்டு தண்ணீர் ஊற்றி கழுவி விடுங்கள். இப்போ பாருங்க பாத்ரூம் டைல்ஸ் புதிது போல மாறியிருக்கும். கோலமாவை பயன்படுத்துவதால் கறைகள் மற்றும் வழவழப்பு தன்மையும் நீங்கி விடும்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டு தரை புதிய தரை மாதிரி மாறுவதற்கு இதை பயன்படுத்துங்க
வினிகர்:
அடுத்த குறிப்பிற்கு ஒரு கப்பில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பேக்கிங் சோடா மற்றும் வினிகர், எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு பாத்ரூம் தரையில் இந்த கலவையை தெளித்து பிரஸ் அல்லது வார்கோல் பயன்படுத்தி தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவி பாருங்கள். புதிய டைல்ஸ் போல் ஜொலிக்கும்.
பேக்கிங் சோட:
பேக்கிக் சோடாவை பாத்ரூம் தரையில் தூவி அரை மணி நேரம் அப்படியே ஊறட்டும். பிறகு பிரஸ் அல்லது வார்கோல் பயன்படுத்தி தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவி விடுங்கள்.
எலுமிச்சை சாறு:
துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர், எலும்பிச்சை சாறு, உப்பு, வினிகர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் இந்த கலவையை பாத்ரூம் தரையில் தெளித்து 1/2 மணி நேரம் அப்படியே ஊறட்டும். பிறகு பிரஸ் அல்லது வார்கோல் பயன்படுத்தி தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவி விடுங்கள்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்பில் எதாவது ஒன்றை பயன்படுத்தினாலே பாத்ரூம் தரை புதிது போல மாறிவிடும். பாத்ரூம் தரை டைல்ஸாக இருந்தாலும் சரி, சிமெண்ட் தரையாக இருந்தாலும் சரி இந்த குறிப்புகளை பயன்படுத்தலாம். மேலும் உங்கள் வீட்டில் விடாப்பிடியான கறைகள் எங்கு இருந்தாலும் இந்த குறிப்புகளை பயன்படுத்தினால் கறைகள் நீங்கிவிடும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |