உப்பு கறை படிந்த பாத்ரூமை சிரமம் இல்லாம இப்படி கிளீன் பண்ணுங்க..!

Bathroom Tiles Cleaning Tips

உப்பு கறை படிந்த பாத்ரூமை சிரமம் இல்லாம இப்படி கிளீன் பண்ணுங்க..! Bathroom Tiles Cleaning Tips..!

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பொதுவாக பெண்களுக்கு வீட்டை கிளீன் செய்யும் வேலை என்றாலே மிகவும் கடினமாக இருக்கும். இது பாத்ரூமை சுத்தம் செய்வதை பற்றி சொல்ல வேண்டாம். அதிலும் பாத்ரூமில் உப்பு கறை படிந்துவிட்டால் பிறகு அதனை கிளீன் செய்வது என்பது மிக மிக சிரமமாக இருக்கும். உப்பு கறை படிந்த பாத்ரூமை மிக எளிதாக சுத்தம் செய்யலாம். நீங்கள் கஷ்டப்பட்டு சுத்தம் செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இருக்காது. ஆம் நண்பர்களே உப்பு கறை படிந்த உங்கள் வீட்டு பாத்ரூமை மிக எளிதாக சுத்தம் செய்யலாம் அது எப்படி என்று இப்பொழுது படிந்த தெரிந்துகொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  • பேக்கிங் சோடா – இரண்டு ஸ்பூன்
  • விம்ஜெல் – இரண்டு ஸ்பூன்
  • வினிகர் – 1/2 கப்
  • ஹார்பிக் – சிறிதளவு
  • எலுமிச்சை சாறு – அரைமூடி

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பித்தளை பாத்திரங்கள் பளபளப்பாக இருக்க வீட்டிலேயே லிக்விட் செய்யலாம்..! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

செய்முறை – Bathroom Tiles Cleaning Tips:

ஒரு பெரிய பிளாஸ்டிக் கப்பை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் பேக்கிங் சோடா இரண்டு ஸ்பூன், விம்ஜெல் இரண்டு ஸ்பூன், வினிகர் 1/2 கப், ஹார்பிக் சிறிதளவு மற்றும் எலுமிச்சை சாறு அரை மூடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இவற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பாத்ரூமில் எங்கெல்லாம் உப்பு கறை படிந்துள்ளதோ அங்கெல்லாம் நன்றாக ஸ்ப்ரே செய்து தேய்த்தாலே போதும் கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

இந்த கிளீனரை நீங்கள் டாய்லெட் பேசனிலும் ஸ்ப்ரே செய்து அவற்றில் உள்ள கறைகளை தேய்த்தால் போதும் அவற்றில் இருக்கும் கறைகளும் அகன்றுவிடும். கண்டிப்பாக உங்கள் வீட்டில் ட்ரெய் செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

மேலும் பாத்ரூம் டையில்ஸ், சில்வர் பைபிள் படிந்திருக்கும் உப்பு கறை, வாஸ்பேஷன், பாத்ரூம் கதவில் படிந்திருக்கும் உப்பு கறை போன்றவரை சுத்தம் செய்வதற்கும் இந்த கிளின்ரை பயன்படுத்தலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சமையலறையில் உள்ள வேலைகளை ஈஸியா முடிக்கனுமா..? அப்போ இந்த டிப்ஸ் போதுமே..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil