உப்பு கறை படிந்த பாத்ரூமை சுத்தம் செய்வது எப்படி.?
நம்முடைய வீட்டில் எதை சுத்தமாக வைத்திருக்கிறோமோ இல்லையோ பாத்ரூமை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது. ஏனென்றால் இவை சுத்தமாக இல்லையென்றால் நமக்கு பல்வேறு நோய் தொற்றை ஏற்படுத்தும். பெரும்பாலும் இன்றைய கால கட்டத்தில் உப்பு நீர் தான் பயன்பாட்டில் உள்ளது. அதனால் வீடு மற்றும் பாத்ரூமில் உப்பு கறை படிந்து விடுகிறது. அதனால் இந்த பதிவில் உப்பு கறை படிந்த பாத்ரூமை எப்படி சுத்தம் செய்வது என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
உப்பு கறை படிந்த இடத்தை சுத்தமாக்க டிப்ஸ்:
தேவையான பொருட்கள்:
கல் உப்பு – ஒரு கைப்பிடி
வினிகர் – 3 தேக்கரண்டி
எலுமிச்சைப்பழம் – சிறிதளவு
சோடா உப்பு – சிறிதளவு
துணி துவைக்க பயன்படுகிதும் பவுடர்- 2 தேக்கரண்டி
செய்முறை:
பாத்ரூமில் படிந்திருக்கும் உப்பு கறையை நீக்குவதற்கு பேக் செய்ய போகிறோம். இதற்கு முதலில் ஒரு பவுல் எடுத்து கொள்ளவும். அதில் கல் உப்பு, எலுமிச்சை பழ சாறு, துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர், சோடா உப்பு போன்றவை சேர்த்து கொள்ளவும்.
மேல் கூறப்பட்டுள்ள பொருட்களின் அளவானது உப்பு கறை படிந்துள்ள இடத்திற்கு தகுந்தது போல் மாறுபடும்.
பின் அதிலேயே வினிகர் 3 தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை உப்பு கறை படிந்துள்ள இடத்தில் பிரஷை பயன்படுத்தி தேய்க்க வேண்டும்.
உப்பு கறை படிந்த இடத்தில் இந்த பேஸ்ட்டை தடவி விட்டு 10 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு பாத்திரம் தேய்க்கும் கம்பி நார் அல்லது வார்கோல் பயன்படுத்தி தேய்த்தால் உப்பு கறை நீங்கி விடும். அதன் பிறகு தண்ணீரை ஊற்றி கழுவி விட வேண்டும்.
அதன் பிறகு தரை காய்ந்த பிறகு ஒரு துணியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். இதனை பயன்படுத்தி உப்பு கறை படிந்த இடத்தில் வைத்து தேய்த்து விட வேண்டும். இப்படி செய்வதினால் மறுபடியும் அந்த இடத்தில் உப்பு கறை படியாது. இந்த வாரத்தில் ஒரு முறை என்று தொடர்ந்து செய்து வர வேண்டும்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |