பாத்ரூமில் உள்ள பாசியை நீக்குவது எப்படி.?
பொதுவாக பெண்களுக்கு பாத்ரூமை கிளீன் செய்வது என்பது கஷ்டமான வேலையாக இருக்கிறது. அதுவும் பெரும்பாலான வீட்டில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இதனால் வீட்டை சரியாக பராமரிக்க முடிவதில்லை. வாரத்தில் ஒரு நாள் மட்டும் தான் வீட்டை பராமரிப்பார்கள். அப்படி இருக்கும் போது பாத்ரூமில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்குவது சுலபமான விஷயம் இல்லை. இதனை நீக்குவதற்காக கடையில் காசு கொடுத்து வாங்கி பொருட்களை பயன்படுத்துவார்கள். இப்படி காசு கொடுத்து வாங்கினாலும் கறைகளை நீக்குவது சுலபமான விஷயம் இல்லை. அதனால் தான் இந்த பதிவில் பாத்ரூமில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீங்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பாத்ரூம் கறைகளை நீக்க தேவையான பொருட்கள்:
- பேக்கிங் சோடா -2 ஒரு கப்
- துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர்
- ஹைட்ரஜன் பெராக்ஸைடு -2
- பல் துலக்கும் பேஸ்ட்- 1
செய்முறை:
வீட்டில் துணி துவைக்க பயன்படுத்தும் பவுடராக இருந்தால் சரி லீகுய்டு ஆக இருந்தாலும் சரி 1 கப் எடுத்து கொள்ளவும். பவுடராக இருந்தால் 1/4 கப் எடுத்து ஒரு கப் தண்ணீரில் சேர்த்து மிக்ஸ் செய்து ஒரு கப் ஆக எடுத்து கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரம் எடுத்து கொள்ளவும், அதில் துணி பவுடர் கலந்து வைத்ததை ஒரு கப் சேர்த்து கொள்ளவும். பின் இதனுடன் பேக்கிங் சோடா 2 தேக்கரண்டி, ஹைட்ரஜன் பெராக்ஸைடு 2 தேக்கரண்டி, பல் துலக்கும் பேஸ்ட் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.
5 நிமிடத்தில் கேஸ் பர்னரை புதியது போல மாற்ற 1 ஸ்பூன் பேக்கிங் சோடா மட்டும் போதும்
பயன்படுத்தும் முறை:
நாம் செய்து வைத்துள்ள liquid-யை பாத்ரூமில் கறை உள்ள இடம் பாசி உள்ள இடத்தில் ஸ்பிரே செய்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 20ம் நிமிடம் கழித்து கறை உள்ள இடத்தை லேசாக தேய்த்தாலே போதும் கறைகள் நீங்கி பளிச்சென்று இருக்கும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |