மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க
வீட்டை நாம் எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும் பூச்சிகள் வந்து அட்டகாசம் செய்யும். கொசு, ஈ, கரப்பான் பூச்சி இவற்றை போலவே மூட்டை பூச்சியும் ஒன்று. இந்த பூச்சி இருந்தால் நிம்மதியாக தூங்க முடியாது. இந்த பூச்சியானது அளவில் சிறியதாகவும், நீளவட்ட வடிவத்தில் காணப்படும். இவை பறக்காது, சுவற்றிலே ஓட்டி இருக்கும். இதற்கு உணவாக இருப்பது நம் இரத்தம் தான். நம் உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி எடுத்து கொள்ளும். மேலும் இவை கடிப்பதால் நமக்கு உடல்நல பிரச்சனைகளும் ஏற்படும். அதனால் இவை வந்த பிறகு எப்படி கொள்வது என்று யோசிப்பதை விட வராமல் தடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க:
வேப்ப எண்ணெய்:
பொதுவாக வேப்ப எண்ணெய் கிருமி நாசியனியாக செயல்படுகிறது. இதற்கு நீங்கள் 100 வேப்ப எண்ணெய் எடுத்து கொள்ளவும். அதில் 400 தண்ணீர், 1/2 ஸ்பூன் துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இதனை மூட்டை பூச்சி இருக்கும் இடமான கட்டில், மெத்தை, இடுக்குகள் போன்ற இடத்தில் ஸ்பிரே செய்ய வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று 20 நாட்களுக்கு செய்து வந்தால் மூட்டை பூச்சி தொல்லை இருக்காது.
வீட்டில் வண்டுகள் இல்லாமல் இருக்க 10 நிமிடம் வேலை இதை செய்தால் போதும்..
அந்துருண்டை:
அந்துருண்டைகள் மனிதர்களுக்கு பிடித்த வாசனையாக இருக்கலாம், ஆனால் பூச்சிகளுக்கு இதனின் வாசனை பிடிக்காது. அதனால் அந்துருண்டைகளை மூட்டை பூச்சி வரும் இடத்தில் வைத்து விட வேண்டும். இதன் மூலம் மூட்டை பூச்சி வராமல் தடுக்க முடியும்.
வினிகர்:
1/4 கப் வினிகர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும். இவை ஆறிய பிறகு ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ளவும். இதனை கட்டில், மெத்தை, சுவர் போன்ற பகுதிகளில் தெளிக்க வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு ஓரி நாள் என்று 20 நாட்களுக்கு தெளிக்க வேண்டும். இதனால் மூட்டை பூச்சி தொல்லை இருக்காது.
வீட்டுக்குள் கரப்பான் பூச்சி வருவதை தடுக்க இந்த எண்ணெயில 2 சொட்டு ஊத்துங்க போதும்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |