வண்டு வராமல் இருக்க
பொதுவாக வீட்டில் அட்டகாசம் செய்யும் பூச்சிகளில் வண்டுகளும் ஒன்று. இவை உணவு மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களிலும் வந்து விடும். அரிசி மற்றும் கோதுமை போன்ற பொருட்களில் வந்து விடும். இதனை சரி செய்வதற்காக பல ரெமிடிகளை ட்ரை செய்தும் எதுமே சரியாகவில்லை என்றால் இந்த பதிவில் கூறியுள்ள டிப்ஸ ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வண்டுகளை நீக்க மிளகு கீரை எண்ணெய்:
வாசனை மிகுந்த பொருட்களுக்கு வண்டுகள் வராது, வண்டுகள் மட்டுமில்லை எந்த பூச்சிகளும் வராது.
இதற்கு ஒரு கப்பில் தண்ணீர் எடுத்து கொள்ளவும், அதில் மிளகுக்கீரை எண்ணெய் 4 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். இந்த தண்ணீரை பயன்படுத்தி வீட்டில் எங்கெல்லாம் வண்டுகள் வருகிறதோ அங்கெல்லாம் தெளித்து விட வேண்டும்.
வேப்ப எண்ணெய்:
வேப்ப எண்ணெயானது இயற்கையான பூச்சி விரட்டியாக உதவுகிறது. அதனால் வேப்ப எண்ணெயை ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். இதனுடன் எதையும் மிக்ஸ் செய்ய வேண்டாம். நேரடியாக வீட்டின் சுவர் பகுதி மற்றும் வடுக்கள் எங்கெல்லாம் வருமோ அந்த இடத்தில் எல்லாம் தெளிக்க வேண்டும். இது போல செய்வதினால் வண்டுகள் வராது.
லாவெண்டர் எண்ணெய்:
லாவெண்டர் எண்ணெயானது மனிதர்களுக்கு நல்ல வாசனையாக இருந்தாலும் பூச்சிகளுக்கு பிடிக்காத ஒன்றாக இருக்கிறது.
பூச்சிகளை விரட்டுவதற்கு ஒரு கப்பில் தண்ணீர் சேர்த்து அதில் 5 தேக்கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இதனை வீட்டின் சுவர் பகுதி, அலமாரி, கபோர்டு போன்ற பகுதிகளில் தெளிக்க வேண்டும்.
வீட்டிற்குள் வண்டுகள் வராமல் இருக்க செய்ய வேண்டியவை:
சில வண்டுகள் லைட் வெளிச்சத்திற்கு வரும். இதனை தவிர்ப்பதற்கு லைட்டை தேவையில்லாத நேரத்தில் அணைத்து விட வேண்டும்.
மேலும் வீட்டின் ஜன்னல், கதவுகள் போன்றவற்றில் இருக்கும் ஓட்டைகள் மூலமும் வண்டுகள் வரும். அதனால் ஜன்னல் மற்றும் கேட் பகுதியில் வலையை வைத்து விட வேண்டும்.
வீட்டிற்கு வெளியே உள்ள வண்டுகளை நீக்க:
வீட்டிற்கு வெளியே வண்டுகளை நீக்குவதற்கு தண்ணீர் மற்றும் சோப் மட்டும் போதும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சேர்த்து கொள்ளவும், இதில் பாத்திரம் துலக்கும் சோப்பை கொஞ்சம் சேர்த்து நுரை வரும் அளவிற்கு கலந்து கொள்ளவும். இதனை எந்த செடியில் வண்டுகள் இருக்கிறதோ அந்த செடிகளுக்கு கீழே வைத்து விட வேண்டும். இந்த பாத்திரத்தில் வண்டுகள் வந்து விழுந்து விடும்.
வீட்டுக்குள் கரப்பான் பூச்சி வருவதை தடுக்க இந்த எண்ணெயில 2 சொட்டு ஊத்துங்க போதும்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |