Toilet Cleaning in Tamil
பொதுவாக நம் முன்னோர்கள் காலத்தில் உள்ள தெருவிற்கு ஒரு டாய்லெட் என்று இருக்கும். ஆனால் இப்போது எல்லாம் வீட்டிற்கு ஒரு டாய்லெட் என்று ஆகிவிட்டது. அப்படி பார்க்கையில் வீட்டிற்கு ஒரு டாய்லெட் இருப்பது என்பது மிகவும் நல்லது என்றாலும் கூட அதனை நாம் எப்படி பராமரிக்கின்றோம் என்பதில் தான் நம்முடைய ஆரோக்கியம் ஆனது காணப்படுகிறது. ஆகவே அனைவருடைய வீடுகளிலும் தினமும் பாத்ரூம் சுத்தம் செய்வதற்கு என்று பல மணி நேரங்களை ஒதுக்கி சுத்தம் செய்து வருகிறார்கள். என்ன தான் பல நேரம் கடைகளில் விற்கும் லீக்கிவுடை எல்லாம் பயன்படுத்தி சுத்தம் செய்தாலும் கூட நாம் எதிர்பார்த்த அளவிற்கு பளிச்சென்று பாத்ரூம் மாறுவது இல்லை. இவ்வாறு பளிச்சென்று மாறவில்லை என்று நினைத்து அப்படியே விட்டு விட்டுடீர்கள் என்றால் அதன் பிறகு சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடும். அதனால் இன்று வெறும் 5 நிமிடத்தில் மஞ்சள் நிறத்தில் மாறிய பாத்ரூமையும் பளிச்சென்று மாற்றுவது எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Bathroom Cleaner Home Remedy in Tamil:
பாத்ரூமை சுத்தம் செய்ய நீங்கள் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் செலவே இல்லாமல் பாத்ரூமை எப்படி பளிச்சென்று சுத்தம் செய்வது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்/
- சீயக்காய்- 2 ஸ்பூன்
- ஷாம்பு- 1 ஸ்பூன்
- புளித்த மாவு (அ) புளித்த தயிர்- 2 ஸ்பூன்
இப்போது நீங்கள் ஒரு பவுலை எடுத்துக்கொண்டு அதில் சீயக்காய் மற்றும் ஷாம்புவை சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள்.
5 நிமிடம் கழித்த பிறகு பவுலில் உள்ள பொருளுடன் புளித்த மோர் மற்றும் புளித்த மாவினை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் வரை நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்பு இதனை அப்படியே சிறிது நேரம் வைத்து விடுங்கள்.
சிறிதளவு நேரம் கழித்த பிறகு கலந்து வைத்துள்ள கலவையை பாத்ரூமில் கறை படிந்து இருக்கும் இடத்தில் நன்றாக தெளித்து விட்டு பின்பு நன்றாக் தேய்த்து கொள்ளுங்கள்.
கடைசியாக பாத்ரூம்மை தேய்த்து முடித்த பிறகு பளிச்சென்று கறை மற்றும் மஞ்சள் நிறம் எதுவும் இல்லாமல் பளிசென்று மாறிவிடும். மேலும் உங்களின் பாத்ரூமில் இருக்கும் கறைகளுக்கு ஏற்றவாறு பொருளை எடுத்துக்கொள்ளுங்கள்.
மேலும் இதனை பயன்படுத்தில் பாத்ரூம் சுவற்றில் உள்ள டைல்ஸையும் சுத்தம் செய்யலாம்.
20 நிமிடத்தில் பாத்ரூம் உப்பு கறையை நீக்க 2 ஸ்பூன் வினிகரை மட்டும் சேருங்கள்
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |