Homemade Floor Cleaner For Mopping in Tamil
வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். ஆனால் வீடு தூசு அடைந்து கொண்டே இருக்கும். எனவே நாம் அனைவரும் வாரத்திற்கு இரண்டு முறை வீட்டை துடைப்போம். எப்போதும் நீங்கள் வீடு துடைக்கும் போது ஏதோ ஒரு லிக்யூடு பயன்படுத்தி துடைப்பீர்கள். அது வீட்டை நறுமணத்துடன் மட்டுமே வைக்கும். வீட்டை சுத்தமாகவும் கரப்பான் பூச்சி, கொசு, பல்லி மற்றும் ஈ தொல்லைகள் இல்லாமலும் வைத்திருக்க இப்பதிவில் குறிப்பிட்டுள்ள முறைகளை பின்பற்றி பாருங்கள். ஓகே வாருங்கள் இப்பதிவை முழுவதுமாக படித்து வீட்டை சுத்தமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் வைத்திருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Best Natural Floor Cleaner for Mopping in Tamil:
ஒவ்வொரு முறையும் வீடு துடைக்கும் போது நாம் வீட்டில் உள்ள ஒட்டடையை எல்லாம் எடுத்து விட வேண்டும்.
1 ஸ்பூன் உப்பு மட்டும் போதும் 1 நிமிடத்தில் பூஜை பாத்திரங்கள் தங்கம் போல் ஜொலிக்கும்..! |
கல் உப்பினை எடுத்து கொள்ளுங்கள்:
முதலில் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கல் உப்பு, 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள்.
கற்பூரத்தை எடுத்து கொள்ளுங்கள்:
பிறகு 1 கற்பூரத்தை தூளாக சேர்த்து கொள்ளுங்கள். இப்போது, இதனுடன் வீடு துடைக்க பயன்படுத்தும் லிக்யூடு 2 மூடி ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
வீட்டினை துடையுங்கள்:
ஒரு வாளியில் வீடு துடைக்க தேவையான அளவு தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் தயார் செய்து வைத்துள்ள லிக்யூடையை சேர்த்து கலந்து மாப் போடுங்கள்.
இவ்வாறு நீங்கள் வீடு துடைக்கும் போது செய்தால் வீடு சுத்தமாகவும் நறுமணத்துடன் இருப்பதோடு மட்டுமில்லாமல் பூச்சிகள் வீட்டிற்குள் வராமலும் இருக்கும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |