Home Cleaning Tips in Tamil
தினமும் வீட்டை சுத்தம் செய்வதற்கு கடினமாக போராடி கொண்டிருக்கும் அனைத்து தாய்மார்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவு இருக்கிறது. தினமும் வீட்டை சுத்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதான வேலை கிடையாது. காலை எழுவது முதல் இரவு தூங்க செல்லும் வரை சிலருக்கு நிறைய வீட்டு வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். அதனால் உங்களுடைய வேலைகளை எளிதாக்கும் வகையில் இன்றைய டிப்ஸ் பதிவு உங்களுக்கு உதவியானதாக இருக்கும். வீட்டு வேலைகளை குறைந்த நேரத்திலும் மற்றும் சுத்தமாகவும் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள் ⇒ பாத்ரூம் டைல்ஸ் எவ்வளவு பழையதாக இருந்தாலும் புதிதாக மாற்ற இந்த ஒரு பொருள் போதும்
Useful Home Cleaning Tips in Tamil:
டிப்ஸ்- 1
உங்களுடையா வீட்டில் இருக்கும் கதவை சுத்தம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். அதனால் முதல் டிப்ஸில் வீட்டில் இருக்கும் கதவை எளிய முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம்.
முதலில் நீங்கள் கதவில் இருக்கும் தூசினை சுத்தம் செய்து விடுங்கள். அதன் பிறகு ஒரு காட்டன் துணியை எடுத்துக்கொண்டு அதில் Vaseline-னை தடவி விடுங்கள். இப்போது Vaseline தடவிய துணியால் கதவை சுத்தும் செய்யுங்கள். இதுபோல நீங்கள் செய்தால் கதவு புதிதாக வாங்கியது போல மாறிவிடும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
டிப்ஸ்- 2
இரண்டாவதாக கிச்சனை சுத்தம் செய்வதற்கான டிப்ஸினை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன், துணி துவைக்கும் பவுடர் 1 ஸ்பூன் மற்றும் தண்ணீர் சிறிதளவு போன்ற அனைத்தையும் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளுங்கள்.
இப்போது வாட்டர் பாட்டில் எடுத்துக்கொண்டு அதில் கரைத்து வைத்துள்ள எலுமிச்சை சாறு தண்ணீரை ஊற்றி விடுங்கள். அதன் பிறகு அந்த பாட்டிலின் மூடி மேலே சிறு சிறு ஓட்டையை போட்டு வாட்டர் பாட்டிலை மூடி விடுங்கள்.
அடுத்ததாக நீங்கள் பாட்டிலில் தயார் செய்து வைத்துள்ள தண்ணீரை கிச்சனில் அழுக்கு உள்ள இடத்தில் மற்றும் கேஸ் அடுப்புகளின் மேலே லேசாக தெளித்து கொண்டு அதன் பிறகு ஒரு துணியால் துடைத்து விடுங்கள். இது மாதிரி நீங்கள் செய்யும் போது கிச்சனும் பளபளப்பாக மாறிவிடும் மற்றும் எந்த விதமான பூச்சிகளும் வராது.
இதையும் படியுங்கள்⇒ பாத்திரம் கழுவுவதில் இப்படி ஒரு Idea இருக்கா தெரியாம போச்சே..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |