எறும்பு தொல்லை நீங்க
அனைத்து வீடுகளிலும் ஈ, கொசு, எறும்பு இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அதுவும் சமைலறையில் எறும்பு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். வீட்டில் ஒரு உணவையும் வைக்க முடியாது, சாப்பிட முடியாது எல்லா உணவு பொருட்களிலும் எறும்பு வந்துவிடும். நூற்றுக்கணக்கான பல்வேறு வகையான பாக்ட்ரியாக்களை எறும்புகள் உணவு பொருட்களில் மீது செலுத்துகின்றன. இப்படி எறும்புகள் உணவுகளை சாப்பிடும் போது நமது உடல் ஆரோக்கியத்தில் தீங்கினை விளைவிக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதற்கு எறும்புகளை விரட்ட வேண்டும். நீங்கள் எறும்புகளை விரட்டுவதற்கு பல முறைகளை கையாண்டுருப்பீர்கள். எதுவும் பலன் கொடுக்கவில்லை என்று கவலை படுவீர்கள். ஆனால் இந்த பதிவில் கூறியிருப்பது போல் செய்தால் ஒரு எறும்பு கூட வராது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
What Is the Best Homemade Ant Killer?
உங்கள் வீட்டில் உள்ள எறும்புகளை ஒழிக்க சில பாட்டி கூறிய கை குறிப்புகள். இந்த குறிப்புகளை பயன்படுத்தி ஆபத்தில்லாத விபத்தில் உங்கள் வீட்டில் உள்ள எறும்புகளை அழிக்கலாம்.
வீட்டில் தயாரிக்க கூடிய எறும்பு விரட்டிகள்:
-
மிளகு மற்றும் வேப்ப எண்ணெய்
முதலில் 1 அல்லது 2 ஸ்பூன் அளவு மிளகு தூள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த மிளகு தூளை வேப்ப எண்ணெய் அல்லது தேயிலை எண்ணெயுடன் சேர்த்து ஒரு சிறிய காட்டன் தூணில் நனைத்து கதவு, ஜன்னல் போன்ற இடங்களில் துடைக்கலாம்.
அல்லது அந்த காட்டன் துணியை எறும்புகள் வரும் வழியில் வைத்து விட வேண்டும்.
2. சோப்பு கரைசல்
உங்கள் வீட்டிற்குள் எறும்புகள் நுழைவுயும் புள்ளிகளுக்கு அருகில் சோப்புத் தண்ணீரைத் தெளிப்பதன் மூலம் அவை உங்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கலாம். சோப்பு நீர் எறும்புகள் விட்டுச்செல்லும் ரசாயனங்களின் தடத்தை நீக்குகிறது. எறும்புகள் பெரோமோன்கன் வேதிப்பொருட்களை கொண்டு ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன. அதனால் பெரோமோன்களை அழிப்பதனால் எறும்புகள் வீடுகளுக்குள் நுழைவதை தடுக்கிறது.
3. வினிகர்
ஒரு ஸ்பிரே பாட்டிலில் தண்ணீர், வினிகர் சேர்த்து அதனை எறும்புகள் நுழையும் இடங்களில் தெளிப்பதால் வீட்டிற்குள் எறும்புகள் தொல்லை குறையும்.
நாம் பயன்படுத்தும் அனைத்தையும் உணவு, செல்லப்பிராணி மற்றும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வீட்டில் ஓயாமல் தொல்லை தரும் கொசுக்களை விரட்ட இதை செய்தால் போதும்..
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |