Sali neenga kashayam
உங்களுக்கு ரொம்ப நாட்களாகவே சளி பிரச்சனை இருக்கா.. அதுவும் நெஞ்சில் சளி ரொம்ப கட்டிக்கிட்டு இருக்கா? இதற்கு என்ன மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் அது சரியக்கமாட்டேங்குதா. அப்படியென்றால் இது உங்களுக்கான பதிவு தான். இன்று நாம் நெஞ்சில் கட்டி இருக்கும் சளியை மலம் வழியாக கரைந்து வெளியே வர செய்ய ஒரு அருமையான கஷாயம் செய்யும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம் ஆக பதிவை தொடர்ந்து படித்து வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
- மிளகு – 12
- சீரகம் – ஒரு ஸ்பூன்
- இஞ்சி – சிறிய துண்டு ஓன்று
- தண்ணீர் – 1½ டம்ளர்
- துளசி இலை – 15
- ஓமவல்லி இலை – இரண்டு
- வெற்றிலை – இரண்டு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்..!
சளி நீங்க கஷாயம் செய்முறை – Best home remedy for cold in tamil:
ஒரு இடி கல்லை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் மிளகு 12, சீரகம் ஒரு ஸ்பூன் இவை இரண்டுயும் சேர்த்து நன்றாக இடிக்கவும். பின் அதனுடன் சிறிய அளவில் ஒரு இஞ்சி துண்டு சேர்த்து அதையும் இடித்துக்கொள்ளுங்கள்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 1½ டம்ளர் தண்ணீர் ஊற்றி இடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், இஞ்சி மூன்றையும் அவற்றில் சேர்க்கவும்.
பின் அடுப்பை பற்றவைத்து அந்த பாத்திரத்தை வையுங்கள் ஒரு கொத்தி வந்ததும் அதனுடன் துளசி, ஓமவல்லி இலை இரண்டியும் சேர்க்கவும், அதேபோல் வெற்றிலையை சிறு சிறு துண்டுகளாக கட் செய்து சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நன்கு கொதிக்கவைக்கவும்.
அவ்வளவு தான் கஷாயம் ரெடி. இதனை வடிகட்டி டீ, காபி பருகும் அளவிற்கு சூடான அளவில் பருகலாம். உங்களுக்கு டேஸ்ட் பிடிக்கவில்லை ஏற்றல் அவற்றில் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம்.
இந்த கஷாயத்தை இரவில் மட்டும் தான் குடிக்க வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் பருகி வந்தாலே போதும் நெஞ்சில் கட்டி இருக்கும் சளி முழுமையாக கரைந்து வெளியேறிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே நாளில் சளி இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |