துணியில் உள்ள சாயத்தை நீக்குவதிலுருந்து வீட்டிற்கு தேவையான அட்டகாசமான குறிப்புகள்

Advertisement

Best Home Tips in Tamil

வணக்கம் நண்பர்களே.! வீட்டில் பெண்கள் தான் வேலை பார்ப்பதில் ரொம்ப கஷ்டப்படுவார்கள். அதிலும் வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தால் வீட்டில் உள்ள வேலையை மட்டும் தான் பார்ப்பார்கள். அதுவே வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் வீட்டில் உள்ள வேலைகளையும் பார்த்து விட்டு அவர்களும் வேலைக்கு செல்வார்கள். உங்களின் வேலைகளை கொஞ்சமாக குறைப்பதற்கு இந்த பதிவில் சில குறிப்புகளை கூறுகிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்கள். அதற்கு நீங்கள் இந்த பதிவை முழுமையாக படிக்க வேண்டும்.

வெள்ளை துணியில் சாயம் போக:

Thuniyil Karai Poga Tips in Tamil

 ஆண்கள் பயன்படுத்தும் சட்டை காலரில் அழுக்குகள் படித்திருக்கும். அதை தேய்ப்பதற்கு பிரஸ் பயன்படுத்தி தேய்ப்பீர்கள். பிரஸ் வைத்து தேய்க்கும் போது அந்த துணிகள் சீக்கிரம் கிழிந்து விடும். அதனால் உடம்பிற்கு தேய்க்கும் நாரை பயன்படுத்தி சட்டையை தேய்க்க வேண்டும். மேலும் ஏதும் கறைகள் இருந்தால் சிறிதளவு தண்ணீரில் பிரீச்சிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை அழுக்கு உள்ள இடத்தில் அப்பளை செய்து நாரை பயன்படுத்தி தேயுங்கள். இதை பயன்படுத்தி தேய்த்தும் லேசாக கறை தெரிந்தால் பல் துலக்கும் பேஸ்ட் அல்லது எலுமிச்சை பழச்சாறு சேர்த்து தேய்த்தால் துணி பளிச்சென்று மாறிவிடும்.  

இதையும் படியுங்கள் ⇒ வீட்டில் மாப் போடும் போது இந்த ஒரு பொருளை கலந்தால் போதும்

கொசு தொல்லை:

kosu thollai tips in tamil

ஒரு 5 பல் பூண்டை தட்டி எடுத்து கொள்ளுங்கள். பின்பு 1 மாஸ்க் எடுத்து கொள்ளுங்கள். மாஸ்கின் ஒரு பகுதியின் ஓரத்தை நறுக்கி கொள்ளுங்கள். நறுக்கிய பிறகு அதன் பிரித்தால் இரண்டாக அதாவது பை போல இருக்கும். இந்த பையின் உள்பகுதியில் தட்டி வைத்த பூண்டு மற்றும் சிறிதளவு தைலம் சேர்த்து கட்டி கொள்ளுங்கள். பிறகு எந்த இடத்தில் கொசு அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் இந்த பையை கட்டி விடுங்கள்.

ஊக்கை மாற்ற:

ஊக்கை மாற்ற

பொதுவாக ஊக்கை எங்கு வைத்தாலும் அதை தேடி தான் எடுப்பார்கள். சரியாக வைத்திருந்தாலும் அவசரத்திற்கு எடுக்க முடியாது. ஒன்றோடு ஒன்று சிக்கி கொண்டு இருக்கும். அதற்கு ஒரு ரப்பர் பேண்ட் எடுத்து அதில் ஊக்குகளை போட்டு கொள்ளுங்கள். பின் இந்த ரப்பர் பேண்டை  உங்கள் வீட்டில் ஈசியாக எடுக்கும் இடத்தில் மாட்டி கொள்ளுங்கள். 

உருளைக்கிழங்கு உரிக்க:

உருளைக்கிழங்கு உரிக்க

உருளைக்கிழங்கை வேக வைத்தால் ஆறிய பிறகு தான் உரிக்க முடியும். ஆனால் நேரம் ஆகிவிட்டது சூடாக இருந்தாலும் உரித்து தான் ஆக வேண்டுமென்றால் ஈசியாக ஒரு ட்ரிக் இருக்கிறது. அது என்னவென்றால் வேக வைத்த உருளைக்கிழங்கை எடுத்து அதில் ஒரு ஸ்பூனை சொருகி தோலை உரியுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ இந்த பூஜை அறை டிப்ஸ் மட்டும் தெரிந்தால் நீங்கள் தான் கில்லாடி.!

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips

 

Advertisement