Best Homemade Floor Cleaning Solution
வீட்டு தரையை சுத்தம் செய்வது கஷ்டமான ஒரு வேலையாக இருக்கும். வாரத்தில் ஒரு நாள் சுத்தம் செய்தாலும் வீட்டு தரை பளிச்சென்ற இருக்காது. நீங்கள் கடையில் விற்கும் LIQUID-யை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தினாலும் பளிச்சென்று இருக்காது. அதனால் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி பளிச்சென்றும், நறுமணமாகவும் வைத்து கொள்ளலாம் அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
வீட்டு தரையை சுத்தம் செய்ய தேவையான பொருட்கள்.?
- வெள்ளை வினிகர்- 1/4 கப்
- சலவை சோடா – 1/4 கப்
- டிஸ் வாஷ் லீகுய்டு – 1 தேக்கரண்டி
- வெந்நீர் – 4 கப்
செய்முறை:
ஒரு பக்கெட் எடுத்து அதில் வெந்நீர், சலவை சோடா, வினிகர், டிஸ் வாஷ் லீகுய்டு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை பயன்படுத்தி வீட்டை துடைக்கவும்.
அதுவே சிமெண்ட் தரையாக இருந்தால் கலவையை தெளித்துவிட்டு வார்கோல் பயன்படுத்தி தேய்க்கவும். பிறகு சுத்தமான தண்ணீரை ஊற்றி அலசி விடவும்.
பாத்ரூமில் உப்பு கரை படிந்த தரையை புதியது போல மாற்ற இந்த Tricks மட்டும் போதும்..!
வீடு வாசமாக இருக்க:
ஒரு கிண்ணத்தில் வேப்பிலை இலைகள் சிறிதளவு, 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி கல் உப்பு, 1 தேக்கரண்டி கற்பூரத்தை நுணுக்கி எடுத்து கொள்ளவும். இந்த பொருட்களை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அரைத்த கலவையை தண்ணீரில் ஊற்றி கலந்து கொள்ளவும். பிறகு இந்த தண்ணீரை சக்கை இல்லாமல் வடிக்கட்டி தண்ணீரை மட்டும் எடுத்து கொள்ளவும்.
வீடு துடைக்கும் பயன்படுத்தும் தண்ணீரில் கலந்து வைத்த கலவையை சிறிது சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரை பயன்படுத்தி வீட்டை துடைத்து பாருங்கள் நறுமணமாக இருக்கும். மேலும் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் வீட்டில் பாக்ட்ரியாக்கள் இல்லாமலும், பூச்சிகள், எறும்புகள் போன்றவை வராமலும் இருக்கும்.
இந்த பவுடரை Use பண்ணா போதும் பாத்ரூமில் பூச்சிகள் மற்றும் துர்நாற்றம் வராமல் இருக்கும்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |