அவசியம் இந்த கிச்சன் டிப்ஸை எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.. உங்கள் வேலையை எளிதாக்கும்..!

Advertisement

வீட்டுக்குறிப்புகள் டிப்ஸ் | Best Kitchen Tips in Tamil

Best Kitchen Tips in Tamil: நண்பர்கள் அனைவருக்கும் பொதுநலம்.காம் பதிவின் அன்பான வணக்கங்கள்.. இன்று நாம் அனைவரது வீட்டிற்கும் தேவைப்படும் அசத்தலான வீட்டுக்குறிப்புகளை பற்றி தான் பார்க்க போகிறோம். இங்கு கூறப்பட்டுள்ள பல டிப்ஸ் கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க அந்த டிப்ஸினை பற்றி இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

டிப்ஸ்: 1

பொதுவாக அனைவரது வீட்டிலும் கண்டிப்பாக குக்கர்  என்பது இருக்கும். அந்த குக்கரில் பருப்பு வேகவைக்கும் போது. அவற்றில் இருந்து பருப்பு தண்ணீர் பொங்கி அடுப்பின் மீது ஊற்றிவிடும். இவற்றை தவிர்க்க குக்கரில் பருப்பு வேகவைக்கும் போது அதில் ஒரு சிறிய ஸ்பூனை போட்டு பருப்பை வேகவைக்கவும். இப்படி செய்தால் பருப்பு தண்ணீர் குக்கரில் இருந்து மேலே பொங்கி ஊற்றாது.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

டிப்ஸ்: 2

கிச்சன் சிங்கிள் அதிகமாக கறைபடிந்திருக்கிறது அவற்றை அகற்ற அதிக சிரமப்படுகிறீர்களா அப்படி என்றால் இன்றுடன் அந்த கவலையை தூக்கிபோடுங்கள். சிங்கிள் உள்ள கறையை அகற்ற சிறிதளவு பேக்கிங் பவுடர் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக சிங்கை தேய்த்து விடுங்கள் பிறகு சில நிடங்கள் காத்திருக்கவும். பிறகு சிங்கை சுத்தமாக கழுவினால், சிங்கிள் உள்ள அனைத்து கறைகளும் நீங்கி பளிச்சென்று மாறிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
கிரைண்டரில் உளுந்து மாவு நிறைய வருவது முதல் ஹீட் ஆவதை சரி செய்ய இதை ட்ரை பண்ணுங்க..!

டிப்ஸ்: 3

பொதுவாக கேஸ் அடுப்பை வாங்கிய புதுசில் அவற்றில் உள்ள பர்னர் நன்கு பளிச்சென்று இருந்திருக்கும். ஆனால் அதனை பயன்படுத்த பயன்படுத்த அந்த கேஸ் பர்னரின் நிறம் கருப்பாக மாறிவிடும். பிறகு அவற்றில் தூசிகள் அடைந்தும் அந்த அடுப்பு சரியாக எறியாது. இந்த இரண்டு பிரச்சனைக்கும் இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள், அதாவது ஒரு பாத்திரத்தில் அந்த பர்னரை போடவும் பின் அதில் அரைமூடி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு Eno சேர்த்து சிறிது நேரம் நன்றாக ஊறவைக்கவும். பிறகு எலுமிச்சை சாறை தொட்டு பர்னரை சுத்தமாக தேய்த்து கழுவினால் புதியது போல் மாறிவிடும்.

டிப்ஸ்: 4wash basin

வாஷ்பேஷன் மங்கலாக இருந்தால், அதன் மீது எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் தடவி, சில நிமிடங்கள் கழித்து, ஒரு சுத்தமான துணி அல்லது ஸ்பாஞ்ச் கொண்டு துடைத்தால், வாஷ்பேஸன் பளிச்சென்று மாறிவிடும்.

டிப்ஸ்: 5

கீரை உருவுவதற்கு பொதுவாக கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இனி அப்படி கஷ்டப்பட வேண்டிய அவசியம் இருக்காது. மேல்படத்தில் காட்டியுள்ளது போல் உங்கள் வீட்டில் ஒரு பவுல் இருந்தால் அவற்றில் இருக்கும் ஓட்டையில் கீரையை சொருகி இழுத்தீர்கள் என்றால் கீரை அழகாக அந்த பவுலின் உள்ளே விழுந்துவிடும். கீரை உருவவும் மிக எளிதாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
துணிகள் வெளுத்து போகாமல் இருப்பதற்கும், துணியில் இருக்கும் கறைகளை நீக்குவதற்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

டிப்ஸ்:6

கரிப்பிடித்த பாத்திரங்களை விளக்குவது என்பது கொஞ்சம் சிரமாக இருக்கும், உங்கள் சிரமத்தை குறைக்கவே இந்த டிப்ஸ். அதாவது கரிப்பிடித்த பாத்திரத்தின் மீது சிறிதளவு தூள் உப்பு மற்றும் சிறிதளவு பேக்கிங் சோடா இரண்டையும் தூவிவிடவும். பின் அதன் மீது டிஸ்ஸு பேப்பர் அல்லது நியூஸ் பேப்பரை போடவும், பின் அதன் மீது சிறிதளவு தண்ணீர் தெளித்து 10 நிமிடம் வரை காத்திருக்கவும், 10 நிமிடம் கழித்து பேப்பரை எடுத்து பார்த்தால் பாத்திரத்தில் உள்ள கரிகால் அனைத்தும் அகன்று பளிச்சென்று மாறிவிடும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement