Best Way To Clean Bathroom Tiles in Tamil
அனைவரது வீட்டிலும் அதிக பயன்பாட்டில் இருப்பது இரண்டு இடங்கள் தான். அதாவது, ஒன்று சமையலறை மற்றொன்று பாத்ரூம். இந்த இரண்டு இடங்களையும் நாம் சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம். பெண்களுக்கு சமையறையில் பாத்திரம் தேய்ப்பது எப்படி பெரிய வேலையாக இருக்கிறதோ அதே அளவிற்கு பாத்ரூம் கிளீனிங் செய்வதும் பெரிய வேலையாக இருக்கிறது. எனவே, வேலை என்பது இருந்துகொண்டு தான் இருக்கும். ஆகையால் அதனை நாம் எப்படி எளிய முறையில் செய்து முடிப்பது என்று தான் யோசிக்க வேண்டும். எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் 15 நிமிடத்தில் உங்கள் பாத்ரூமை பளிச்சென்று மாற்றக்கூடிய கிளீனிங் முறையை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Good Way To Clean Bathroom Floor in Tamil:
பிளீச்சிங் பவுடர் மற்றும் பிற பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
- பிளீச்சிங் பவுடர்
- எலுமிச்சை சாறு
- பேக்கிங் சோடா
- வினிகர்
சுத்தம் செய்யும் முறை:
முதலில், ஒரு கப் அல்லது வாளியில் பிளீச்சிங் பவுடர் 5 ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். இதில் தேவையான அளவு எலுமிச்சை சாறு, வினிகர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து ஒரு குச்சி அல்லது கரண்டி வைத்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
கையில் கிளவுஸ் அணிந்துகொண்டு இதனை, பாத்ரூமில் கறைபடிந்துள்ள டைல்ஸின் அனைத்து பகுதிகளிலும் தெளித்துவிட்டு 15 நிமிடம் வரை நன்கு ஊறவிடுங்கள்.
கரையை போக்க இத மட்டும் Try பண்ணுங்க போதும்
அதன் பிறகு, ஒரு பாத்ரூம் பிரஷ் அல்லது கம்பி ஸ்க்ரப்பர் கொண்டு நன்கு அழுத்தி தேய்த்து விடுங்கள். அதன் பிறகு, ஒன்றிற்கு இரண்டு முறை தண்ணீர் விட்டு நன்கு சுத்தம் செய்து விடுங்கள்.
இவ்வாறு நீங்கள், மாதத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் போதும்.. உங்கள் பாத்ரூம் டைல்ஸ் எப்போதும் பளிச்சென்று மின்னும்.
வெள்ளை வினிகர்:
பாத்ரூம் டைல்ஸை சுத்தம் செய்வதற்கு மிகவும் எளிமையான முறை வெள்ளை வினிகர் தான். வெள்ளை வினிகரை பாத்ரூம் டைல்ஸில் ஸ்பிரே செய்து ஸ்க்ரப்பர் கொண்டு நன்கு தேய்த்து எடுத்தால் நிமிடத்தில் பாத்ரூம் டைல்ஸ் பளிச்சென்று மாறிவிடும்.
துருப்பிடித்த பாத்ரூம் பைப்களை 10 நிமிடத்தில் பளிச் என்று மாற்ற என்ன செய்யலாம்
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |