மசாலாக்களை பாதுகாக்க
நமது உணவு தேவைகளில் முக்கியமானது காய்களுக்கு அடுத்தது முக்கிய இடம்பிடிப்பது மசாலாக்கள். மசாலாக்கள் நமது உணவின் சுவையை மெருகேற்ற அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக நாம் ஒரு வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ நமக்கு தேவையான மசாலாக்களை தயாரித்து பாதுகாப்போம். இவ்வாறு தயாரித்து வைப்பது நமக்கு நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாது செலவுகளையும் குறைக்கும். இவ்வாறு தயாரித்து அடைத்துவைப்பதால் கோடைகாலங்களில் இவற்றின் ஆயுட்காலம் நன்றாக இருக்கும். ஆனால் குளிர்காலங்கள் தொடங்கிய பின்னர் மசாலாக்களை பூச்சிகள் மாற்றுக்கள் பாதிக்க ஆரம்பித்து விடும். அந்த சமயங்களில் நமக்கு அவற்றை பயன்படுத்துவதால் உடல்நல குறைபாடுகள் ஏற்படும். இவ்வாறு மசாலாக்கள் பல மாதங்கள் பிறகும் கெடாமல் இருக்க என்ன செய்யலாம். மழை காலங்கள் ஆரம்பித்துவிட்டது இனி நமது உணவு பொருட்களை பூச்சி மற்றும் பூஞ்சைகளிடம் இருந்து பாதுகாப்பது முக்கியம். வாருங்கள் இன்றைய பதிவில் மாதங்கள் பல ஆனாலும் மசாலாக்கள் கெடாமல் இருக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Best way to keep masala from Insects and fungi in tamil:
சமையலுக்கு வெங்காயம், தக்காளி, மிளகாய் எவ்வளவு முக்கியமோ அதை போல் மசாலாக்களும் மிக முக்கியம். காரசாரமான சமையலுக்கு மசாலாக்கள் மிக முக்கியம். நமது வீட்டு சமயலறையில் மிளகாய் வெங்காயம் தக்காளி உடன் மசாலாக்கள் இருந்தால் போதும் ருசியான சமையலை செய்யலாம். ஆனால் இந்த மசாலாக்களை பாதுகாப்பாக நாம் சேமித்துவைப்பது என்பது இந்த மழை காலங்களில் சான்று கடினமான செயலக இருக்கும். அதற்கான சில Tips..
உப்பு:
நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாக்களை ஒரு காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்த வேண்டும். நீங்கள் அப்படி மசாலாக்களை பத்தரப்படுத்தும் போது அதில் சிறிதளவு தூள் உப்பை கலந்துகொள்ளலாம். உப்பு கிருமிநாசியாக செயல்படும். உங்கள் மசாலாவில் ஒரு தேக்கரண்டி தூள் உப்பை சேர்த்து முழுவதும் கலக்கி விட வேண்டும்.
பெருங்காயம்:
பின்னர் ஒரு காட்டன் துணியில் பெருங்காயத்தை கட்டி அதனை உங்கள் மசாலாக்கள் இருக்கும் பாத்திரத்தில் வைத்துவிடலாம்.
காய்ந்த மிளகாய்:
உங்கள் மசாலா பாத்திரத்தில் 5 காய்ந்த மிளகாய்களை மசாலாவுடன் சேர்த்து வைக்கலாம். இவ்வாறு வைப்பதால் மசாலாவில் பூச்சுகள் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |