மழைக்காலங்களிலும் காய்கறி அழுகாமல் இருக்க என்ன செய்யுறது?

Advertisement

பசுமையான காய்கறிகளுக்கு 

நமது உணவு தேவைகளில் முக்கியமானது காய்கள். பொதுவாக நாம் ஒரு வாரத்திற்கு தேவையான காய்களை ஒரே வேலையாக வாங்கி நம்முடைய பிரிட்ஜில் அடுக்கி விடுவோம். இப்படி செய்வதால், வேலைகளுக்கு செல்லும் பலருக்கு வேலை மிச்சமாகிறது. கோடைகாலங்களில் இது நல்ல வழி என்றாலும். குளிர்காலத்தில் நம்மால் அதிகப்படியான காய்களை வாங்கி வீட்டில் பத்திரப்படுத்த முடியாது. காரணம் காற்றில் உள்ள ஈரப்பதம். அதனால் காய் மற்றும் கனிகள் கூடிய விரைவில் அழுகிவிடும். இதனால் நம்மால் நமக்கு தேவையான பொருட்களை சேமிக்க முடியாது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வழிதான் என்ன? நமக்கு கிடைக்கும் சிறிது ஓய்வில் நாம் வீட்டிற்கு தேவையான காய் மற்றும் பழங்களை வாங்குகிறோம். ஆனால் அதனை சரியாக பாதுகாக்க நமக்கு தெரிவதில்லை. இன்றைய பதிவில் மழை காலங்களில் காய் மற்றும் பழன்களை அழுகாமல் பாதுகாப்பது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Store Vegetables For Long Time in Tamil:

பசுமையான காய்கறிகளுக்கு 

Tips 1:

மழைக்காலங்களில் அதிகப்படியான குளிர்ச்சிக் காரணமாக உணவு பொருட்கள் சீக்கிரமாகவே கெட்டுபோய்விடும். அதற்கு காரணம் மழைக்காலங்களில் காய் மற்றும் பழங்களில் மேல் உருவாகும் பூஞ்சைகள். இந்த பூஞ்சைகளால் காய், பழங்கள் போன்ற உணவுப்பொருட்கள் அழுகிவிடும்.

இந்த பூஞ்சைகளை தடுக்க வினிகர் பயன்படுத்தலாம்.

ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் 1 கப் வினிகர் சேர்த்து அதில் காய் மற்றும் பலன்களை அலசி, பிறகு சிறிது நேரம் உலர்த்திய பின்னர் காட்டன் துணிகளை கொண்டு காய்களை துடைத்துவிட்டு அதனை பாதுகாக்கலாம்.

வினிகர் பயன்படுத்துவதால், பூஞ்சைகள், நோய் கிருமிகள் தாக்குதல் குறையும்.

Best way to keep vegetables from rotting in tamil

Tips 2:

புதினா, கொத்தமல்லி மற்றும் கருவேப்பில்லை ஆகியவற்றை நன்றாக மண் இல்லாமல் அலசிவிட்டு அதனை, ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பாதி தண்ணீரில் இருக்கும்மாறு வைக்கலாம். இவ்வாறு செய்வதால் புதினா கொத்தமல்லி மற்றும் கருவேப்பில்லை சீக்கிரம் காய்ந்து போகாமல் இருக்கும்.

பசுமையான காய்கறிகளுக்கு 

வெங்காயம், தக்காளி மற்றும் உருளை கிழங்கு போன்ற காய்களை மிதமான குளிர்ச்சியில் இருக்கும்படி ஒரு அகண்ட கூடையில் நன்கு பரப்பி பாதுகாக்கலாம்.

மழைக்காலங்களில் கீரைவகைகள், மற்றும் வெட்டிய காய்களை வாங்குவதையும் அதனை பாதுகாப்பதையும் தவிர்க்கவும்.

கீரைகளில் மண் சேர்ந்த்துவருவதால் அதில் அதிகப்படியான பூஞ்சைகள் உருவாக்க காரணமாக அமைகிறது.

அதை போல் வெட்டியா காய்களிலும் பூஞ்சைகள் அதிக அளவில் உற்பத்தியாகும். இதனால் காய்கள் சீக்கிரமாக கெட்டுவிடும்.

பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…

சமயலறையில் படிந்துள்ள எண்ணெய் கரையை நிமிடத்தில் போக்க என்ன செய்யலாம்.

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips

 

Advertisement