Bike Maintenance Tips Tamil
மழைக்காலம் வந்தாலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனைகளும் கூடவே சேர்ந்து வரும். அதாவது வேலைக்கு செல்வது, பள்ளி, கல்லூரிக்கு செல்வது மற்றும் மற்ற இடங்களுக்கு செல்வது இத்தகைய நிகழ்வுகள் அனைத்தும் பெரும்பாலும் பாதிக்கப்படும். அப்படி பார்த்தால் விலங்குகளும், மனிதர்களும் தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்று நாம் நினைத்து கொண்டிருக்கும், அது என்னவோ உண்மையாக இருந்தாலும் கூட இவை இல்லாமல் மழையினால் பாதிக்கப்படும் மற்ற சிலவையும் இருக்கிறது.
அதாவது மழை வந்தால் மழையில் நனையாமல் இருக்க வேண்டும் என்று நாம் வீட்டிலேயே இருப்போம். ஆனால் நாம் வெளியிடங்களுக்கு செல்ல பயன்படுத்தும் வாகனங்கள் எப்போதும் மழையில் தான் இருக்கும். இவ்வாறு மழையில் கார் மற்றும் பைக்குகள் நனைவது மூலம் அதில் உள்ளே இருக்கும் சில பொருட்கள் உடனே இல்லாவிட்டாலும் கூட சில மாதங்களுக்கு பிறகு பழுதடையும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே இன்றைய பதிவில் மழைக்காலத்தில் செய்ய வேண்டிய பைக் பராமரிப்பு டிப்ஸ் பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பைக் பராமரிப்பு டிப்ஸ்:
டிப்ஸ்- 1
மழைக்காலத்தில் வீட்டில் இருந்து வெளியே செல்ல பைக்கை எடுப்பதற்கு முன்பாக பிரேக் சரியாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் மழையில் பைக்குகள் நனைந்து இருந்தால் பிரேக் பிடிப்பதில் திடீரென்று சிரமம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ஆகையால் பிரேக் மற்றும் டயர் என இந்த இரண்டையும் எப்போதும் கவனமாக சரி பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
டிப்ஸ்- 2
பைக்கினை மழைக்காலத்தில் வெளியே நிறுத்தும் போது சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தக்கூடாது. ஏனென்றால் சைடு ஸ்டாண்ட் போட்டு பைக்கை நிறுத்துவதன் மூலம் மழைநீர் வண்டியின் மேல் பட்டு சரிந்து வலது பக்க ஹேண்டில்பார் வழியாக மழை நீர் கீழே இறங்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
ஆகையால் இதனை தவிர்ப்பது நல்லது.
டிப்ஸ்- 3
உங்களது வண்டியில் உள்ள ஏர் ஃபில்டரை அப்படியே விட்டு விடாமல் சுத்தும் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒருவேளை சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டு விட்டீர்கள் என்றால் மழைக்காலத்தில் ஏர் ஃபில்டரில் அடைப்பு ஏற்படும்.
டிப்ஸ்- 4
பைக் செயினில் தூசி, மண் மற்றும் சேறு என இவற்றை எல்லாம் படியும் காரணத்தினால் பைக் செயினை சுத்தும் செய்து கொண்டே இருக்க வேண்டும். மேலும் அதோடு மட்டும் விட்டு விடமால் ஆயில் போட வேண்டும்.
டிப்ஸ்- 5
இத்தகைய முறையினை எல்லாம் சரியான முறையில் பின்பற்றி வந்தாலும் கூட மழைக்காலத்தில் பெரும்பாலும் பைக்கிற்கு பைக் கவர் பயன்படுத்துவதன் மூலம் பெரும்பாலும் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
வெள்ளத்தில் சிக்கிய கார்களை எப்படி கையாள வேண்டும் என்று தெரியுமா
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |