உங்கள் பைக் புதுசு போல மாறவேண்டுமா! அப்போ இந்த பயனுள்ள டிப்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள்.!

bike wash tips in tamil

பைக் சுத்தம் செய்வது எப்படி?

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் பலரும் உபயோகப்படுத்தும் பைக்கை சுத்தம் செய்வதை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இன்றைய காலகட்டங்களில் அதிகமாக இளைஞர்கள் முதல் மகளிர்கள் வரை பைக் என்ற வாகனங்களை விதவிதமாக பயன்படுத்தி வருகிறார்கள்.  சில பேருக்கு பைக் வாங்குவது  ஒரு கனவாக இருக்கும். அப்படி பட்டவர்களுக்கு  பைக்கை எப்படி பராமரிப்பது என்று தெரியவில்லை. நாம் வைத்திருக்கும் வாகனங்களை சுத்தம் செய்வதற்க்கு  மெக்கானிக்கல் கடைகளில் விடாமல் நம் வீட்டிலே சுத்தம் செய்யலாம். மேலும் பைக்கை எப்படி பராமரிப்பது என்றும், அவற்றை சுத்தம் செய்வதை பற்றியும் காணலாம் வாங்க.

உங்கள் துணியில் எந்த வித கறை படிந்தாலும் இனி கவலை வேண்டாம்.. இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்கள் போதும்

 

Bike wash tips in tamil:

பொதுவாக எல்லாரும் பைக் வாஷ் செய்வதற்கு சர்வீஸ் சென்டர்க்கு விடுவார்கள். அப்பொழுது அவர்கள் வாட்டர் வாஷ் செய்து, பைக்கை சர்வீஸ் செய்து பிறகு அதை பாலிஷ் செய்து தருவார்கள். அதை  நம் வீட்டிலேயே சுலபாக பாலிஷ் செய்து  கொள்ளலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

முதலில் ஒரு காட்டன் துணிகளை எடுத்து கொண்டு சுலமபாக இருக்கும் இடங்களில் துடைத்துக்கொள்ளவேண்டும். அதன் பிறகு இன்ஜின், டயர் பகுதிதிகளில் தண்ணீர் Hose Pipes கொண்டு சுத்தம் செய்யலாம்.

அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் ஏதேனும் Shampoo இருந்தால் அதை அந்த கிண்ணத்தில் சேர்த்து நன்றாக கைகளை வைத்து கலந்துவிட்ட பிறகு. ஒரு வாட்டர் பாட்டிலில் கலந்த Shampoo வை சேர்த்து ஸ்ப்ரே மூடியை கொண்டு. அந்த பைக் முழுவதும் Shampoo கலவையை அடித்து கொண்டு 15 நிமிடம் கழித்து, அதனை ஒரு காட்டன் துணியால் துடைத்து கொண்டு. அதன் பிறகு Hose Pipes கொண்டு கழுவி கொள்ள வேண்டும்.

பைக்கை கழுவிய பிறகு ஒரு ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து கொண்டு, அந்த ஸ்ப்ரே பாட்டிலில் ஆயில் சேர்த்து பைக் முழுவதும் ஸ்ப்ரே செய்து, ஒரு துணியில் துடைத்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் பைக் புதிதாக மாறிவிடும்.

பைக் பராமரிப்பு டிப்ஸ்:

பைக்கை மூன்று மாதத்தில் ஒரு முறையாவது வாட்டர் சர்வீஸ் செய்வது அவசியம்  அல்லது 3000 கிலோ மீட்டருக்கு மேல் பைக்கில் பயணிக்கும் பொழுது கண்டிப்பாக வாட்டர் சர்வீஸ் செய்வது முக்கியம்.

அதேபோல் பைக்கில் ஏதேனும் பிரச்சனைகள் என்றால் தெரிந்த மெக்கானிக்கிடம் கொடுப்பது அவசியம். அப்படி தெரியாதவர்களிடம் கொடுக்கும் பொழுது   தேவைப்படும் உதிர் பாகங்களை எடுத்து கொள்வார்கள்.

முதலில் பைக் டயரில் சரியான அளவு காற்று நிரம்பி உள்ளதா என்று தினமும் கண்கணிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அதேபோல் டயர் அடிக்கடி பஞ்சர் ஆனால் டயரை மாற்றுவது மிகவும் அவசியமாகும். சர்வீஸ் செய்வதற்கு முன்பு டயர் எந்த அளவிற்கு தேய்ந்திருக்கிறது என்று பார்த்து கொள்ளவேண்டும்.

அடுத்ததாக பைக் செயினை பொறுத்தவரை தளர்வாகவும் இருக்க கூடாது, இறுக்கமாகவும் இருக்க கூடாது. செயின் இருக்கும் பகுதியில் வாட்டர் சர்வீஸ் செய்யும் பொழுது செயினில் ஆயில் சேர்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

பைக் எடுக்கும் பொழுது சாவி போட்டதும் இன்ஜினில் இருந்து தொடர்ந்து கருப்பு நிறத்தில் புகை வந்தால், இன்ஜினில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். ஸ்பார்க் பிளக் லூஸாக இருந்தாலும் பைக் எடுக்காது.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tips in Tamil