Biryani Masala Ingredients in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு பிரியாணி இந்த பிரியாணிக்கு சுவை மற்றும் மனதை கூட்டக்கூடிய ஒன்று தான் பிரியாணி மசாலா, நாம என்னதான் கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரியாணி மசாலாவை வாங்கி வந்து பிரியாணி செய்தாலும், பாய் வீட்டு பிரியாணிக்கு ஈடாது அதற்கு முக்கிய காரணம், அவர்கள் வீட்டிலேயே தயார் செய்யும் பிரியாணி மசாலா தான் காரணம். அந்த மசாலாவை நீங்களும் தயார் செய்து பிரியாணி செய்யலாம், அந்த மசாலா தயார் செய்வது எப்படி என்று தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். சரி வாங்க இந்த மசாலா செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- பட்டை – 30 கிராம்’
- ஏலக்காய் – 30 கிராம்
- கிராம்பு – 15 கிராம்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கரம் மசாலா பொடி இப்படி பக்குவமா மணக்க மணக்க அரைச்சு வைங்க..!
பிரியாணி மசாலா செய்முறை:
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 30 கிராம் பட்டை, 30 கிராம் ஏலக்காய் மற்றும் 15 கிராம் கிராம்பு இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து வறுக்கவும்.
ஓரளவு மசாலா பொருட்களில் வாசனை வந்த பிறகு அடுப்பை அனைத்து மசாலா பொருட்களை ஆறவைக்கவும்.
மசாலா பொருட்கள் நன்கு ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு போவுடர் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.
அரைத்த பிறகு சிறிது நேரம் பவுடரை ஆறவைத்து பின்பு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடிவைக்கவும்.
அவ்வளவுதான் அருமையான சுவையில் பிரியாணி பவுடர் தயார். இந்த பவுடரை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
மேலும் நீங்கள் அரை கிலோ பிரியாணி செய்கிறீர்கள் என்றால் இந்த பிரியாணி மசாலாவை முக்கால் ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் பயன்படுத்தலாம் அதற்கு மேல் பயன்படுத்த வேண்டும். இல்லையன்றால் பிரியாணியின் சுவை மாறிவிடும்,
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 மாதம் வரை பச்சை மிளகாய் வீணாகாமல் இருக்க இந்த டிப்ஸை மட்டும் Try பண்ணுங்க போதும்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |