புரட்டாசி மாதம் ஆண் பெண் இருவருமே கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்

Both men and women must do in the month of Purattasi in tamil

புரட்டாசி மாதம் தவிர்க்க வேண்டியை

பொதுவாக இந்த மாதம் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அதிலும் மிகவும் முக்கியமாக பக்தியுடன் வழிபடுவது என்றால் அது புரட்டாசி மாதம் தான் அப்படி இருக்கும் பட்சத்தில் ஆண் பெண்கள் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என சில விஷயங்கள் உள்ளது அது இரண்டையும் இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

புரட்டாசி மாதம் செய்ய வேண்டியவை?

புரட்டாசி மாதம் செய்ய வேண்டியவை

  • பொதுவாக இப்போது யாரும் காலையில் எழுவது கிடையாது. அந்த காலத்தில் காலையில் ஆண் பெண் இருவருமே எழுந்துவிடுவார்கள் ஆனால் இப்போது யாரும் அப்படி இல்லை. இந்த புரட்டாசி மாதம் மட்டும் ஆண் பெண் இருவருமே பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கை ஏற்றிவைத்து வழிபடுவது என்பது மஹாலட்சி தாயார் விளக்கில் தோன்றி நமக்கு நன்மையை அளிப்பார்கள்.

பஞ்ச பாத்திரம் தீர்த்தம்

  • தினமும் பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தம் வைத்து வழிபாடு செய்வது நல்லது. உங்களால் கட்டாயம் தீர்த்தம் செய்ய முடியும் என்றால் கட்டாயம் வழிபாடு செய்வது நல்லது. உங்களால் தீர்த்தம் செய்ய முடியவில்லை என்றால் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் கற்பூரத்தை நுணுக்கி போடுங்கள் பின் அதில் துளசி இலையை போட்டு வழிபாடு செய்யலாம்.

கற்பூரம்

  • காலை மாலை நேரம் தீபம் ஏற்றும் போது அதில் சிறிது கற்பூரம் சேர்த்து விளக்கு ஏற்றினால் அந்த நறுமணம் ஆனது வீடு முழுவதும் படுவதால் கெட்ட சக்தி என்று சொல்ல கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வழிபாடு செய்யவது நல்லது. அந்த விளக்கு ஏற்றும் போது அதில் சிறிது கற்பூரத்தை போட வேண்டும்.
  • காலையில் வழிபாடு செய்யும் போது அதில் நெய்வேத்தியம் கொண்டு பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்தால் அவ்வளவு நன்மைகள் உண்டு. அதனால் அதிகாலையில் வழிபாடு என்பது ஏதாவது உங்களால் ஆனா ஏதாவது  நெய்வேத்தியம் செய்வது வழிபடுவது நல்லது.

காகத்திற்கு உணவு வைப்பது

  • தினமும் புரட்டாசி மாதம் காகத்திற்கு உணவு வைப்பது என்பது கட்டாயம் செய்யவது நல்லது காரணம் வீட்டில் யாருக்காவது ஒருவருக்கு சனி திசையானது நடந்துகொண்டு இருக்கும் அப்படி நடக்கவில்லையென்றாலும் பரவாயில்லை சனிபகவானின் வாகனமான காகத்திற்கு சாதம் வைப்பது மிகவும் நல்லது சனிபகவானால் நடக்க இருக்கின்ற பாதகத்திலிருந்து உங்களை பெருமாள் காப்பாற்றுவார்.

புரட்டாசி மாதம் தவிர்க்க வேண்டியை:

  • புரட்டாசி மாதம் வீடு குடி செல்வது, வீடு மாற்றுவது போன்ற சுபகாரியங்களை தவிர்த்துவிடுங்கள்.
  • இந்த புரட்டாசி மாதம் என்பது செல்வத்திற்கு உகந்த மாதம் அந்த மாதத்தில் யாரும் கடன் கொடுக்க கூடாது. என்னால் கட்டாயமாக கடன் கொடுக்க வேண்டும் என்றால் தானமாக கொடுத்து விடுங்கள்.
  • அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். இதற்கு அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் காரணம் உண்டு அதனால் அசைவ உணவுகளை தவிர்த்திடுங்கள்.

புரட்டாசி மாதத்தில் விரதம் எடுப்பதின் உண்மை வரலாறு தெரியுமா..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉Tips in Tamil