பித்தளை பாத்திரங்கள் பளபளப்பாக இருக்க வீட்டிலேயே லிக்விட் செய்யலாம்..! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

Brass Dishwashing Liquid Homemade

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் அனைவருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்றும். அது என்ன என்று கேட்பீர்கள். பித்தளை பாத்திரம் கழுவுவதை பற்றி தான் கூறுகின்றோம். கடைகளில் இருந்து லிக்விட் மற்றும் பவுடர் வாங்கி வந்து எவ்வளவு தான் தேய்த்தாலும் பித்தளை பாத்திரம் பளபளப்பாக இல்லை என்று கவலைப்படுபவரா நீங்கள்..? இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இனி பித்தளை பாத்திரம் பளபளப்பாக இருக்க கடைகளில் காசை செலவு செய்ய தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பித்தளை பாத்திரங்களை பளபளப்பாக வைக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Brass Dishwashing Liquid Homemade in Tamil: 

  1. எலுமிச்சை பழத்தோல் – 20
  2. உப்பு – 3 ஸ்பூன்
  3. வினிகர் – 1/4 கப்
  4. பேக்கிங் சோடா – 2 ஸ்பூன்

எலுமிச்சை பழத்தின் தோலை எடுத்து கொள்ளவும்:

எலுமிச்சை பழத்தின் தோல்

முதலில் உங்களிடம் இருக்கும் அதாவது குறைந்தது 10 எலுமிச்சை பழத்தின் தோலை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.

பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை பழத்தின் தோலை போட்டு 15 லிருந்து 20 நிமிடம் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து எலுமிச்சை தோல் நன்றாக வெந்ததும் அடுப்பில் இறக்கி ஆறவிட வேண்டும்.

பாத்திரம் கழுவுவதற்கு இனி கடையில் சோப்பு வாங்க வேண்டிய அவசியமில்லை..! எலுமிச்சை பழத்தின் தோலை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்:

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்

பின் வேகவைத்த எலுமிச்சை தோல் ஆறியதும் அதை மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் போல நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நாம் அரைத்த பேஸ்டை ஊற்ற வேண்டும். பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.

பின் அது கொதிக்க ஆரம்பம் ஆகும் போது அதில் நாம் எடுத்து வைத்துள்ள வினிகரை சேர்த்து கலந்து விட வேண்டும். பின் அதை 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை அடுப்பில் இருந்து இறக்கி அதில் பேக்கிங் சோடா 2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் நண்பர்களே இந்த லிக்விடை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ள வேண்டும். இந்த லிக்விடை பயன்படுத்தி பித்தளை பாத்திரங்களை கழுவினால் பித்தளை பாத்திரங்கள் ஜொலிக்கும். நீங்களும் இதுபோல செய்து உங்கள் வீட்டில் இருக்கும் பித்தளை பாத்திரங்களை பளபளக்க செய்யுங்கள்..!

உங்கள் வீட்டு பாத்ரூம் சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil