துணி வைக்கும் பீரோ
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் துணிகளை பீரோவில் எப்படி வைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். சில வீட்டில் ஒரு பீரோ தான் இருக்கும் அதில் துணிகளை வைக்க முடியவில்லை என்று இன்னொரு பீரோல் வாங்க சொல்வார்கள். அந்த பீரோவில் துணிகளை மடித்து வைக்கும் முறையை கொஞ்சம் மாற்றினாலே 10 நபர்களின் துணிகளை கூட வைக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
பீரோவில் துணி மடித்து வைக்கும் முறை:
முதலில் பீரோவில் உள்ள செல்பை தூசி இல்லாமல் துடைத்து கொள்ளுங்கள். செல்ப் அடிப்பகுதியில் ஒரு காலண்டர் அட்டை அல்லது செய்தி தாள் எதவாது ஒன்றை போட்டு கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் துணிகளின் நிறம் மாறாமல் புதிய ஆடை போலவே இருக்க இதை செய்யுங்கள்.!
முதலில் மேலே இருக்கும் செல்ப்பில் புடைவைகளை சிறியதாக மடித்து வையுங்கள். மேலே இருக்கும் செல்பில் 4 பகுதிகளாக பிரித்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பகுதியையும் ஒரு அட்டை பெட்டி அட்டையை எடுத்து தடுத்து கொள்ளுங்கள்.
அடுத்து 2 செல்ப் அட்டை பெட்டியை வைத்து 4 பகுதிகளாக பிரித்து கொள்ளுங்கள். அதில் முதல் இரண்டு பகுதிகளால் Divided டேபிள் வைத்து இரண்டாக பிரித்து கொள்ளுங்கள். இந்த இரண்டாவது செல்பில் குழந்தைகளின் துணிகளை சிறியதாக மடித்து கொள்ளுங்கள்.
அடுத்து மூன்றாவது செல்பில் நான்கு பகுதிகளாக பிரித்து கொள்ளுங்கள். அதில் இன்னும் வேறு என்ன துணிகள் இருக்கிறதோ அதை புது துணி வாங்கினால் அதற்கு ஒரு பாக்ஸ் கொடுப்பார்கள் அல்லவா.! அந்த பாக்சில் துணிகளை வைத்து கொள்ளுங்கள்.
நான்காவது அறையில் நான்கு பகுதிகளாக பிரித்து அட்டையை குறுக்கே வைத்து அதன் இடையில் துணிகளை வைத்து கொள்ளுங்கள்.
மேல் கூறப்பட்டள்ளது போல் தான் வைக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. உங்களுக்கு எந்த அறையில் எந்த துணைகளை வைக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அது போல் வைத்து கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் துணி வெளுத்து போச்சுன்னா இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்கள்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |