Burnt Pan Cleaning Process in Tamil
How to Clean a Burnt Pan in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. ஆண்கள், பெண்கள் இருவருமே இப்போது சமையல் செய்கின்றன.. ஆண்கள் வெளியிடங்களுக்கு சென்று வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை வரும்போது, அவர்கள் தான் சமைத்து சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பெண்களுக்கு சொல்லவே தேவையில்லை தினமும் சமையல் செய்யும் வேலை அவர்களுக்கு இருக்கும். இப்படி அவர்கள் செய்யும் வேலையில் மிகவும் கடினமான வேலை எதுவென்றால் பாத்திரம் துலக்கும் வேலை தான். அதிலும் சமைக்கும் போது பாத்திரங்கள் அடிப்பிடித்துவிட்டது என்றால் அந்த பாத்திரத்தை சுத்தம் செய்ய மிகவும் சிரமமாக நினைப்பார்கள். குறிப்பாக சிலர் அந்த பாத்திரத்தில் அடிப்பிடித்துவிட்டது என்றால் அதனை திரும்ப பயன்படுத்தமாட்டார்கள். அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய கஷ்டப்படும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய ஒரு அருமையான டிப்ஸை பற்றி தான் பார்க்க போகிறோம்.
சரி வாங்க அடிப்பிடித்த பாத்திரத்தை எப்படி சுலபமாக சுத்தம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl
அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
- பேக்கிங் சோடா – ஒரு ஸ்பூன்
- துணி பவுடர் – ஒரு ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாத்திரம் கழுவுவதில் இப்படி ஒரு Idea இருக்கா தெரியாம போச்சே..!
அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்யும் முறை – How to Clean a Burnt Pan in Tamil:

அடிப்பிடித்த பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் துணி பவுடர் மற்றும் தண்ணீர் ஒரு கப் ஊற்றி கலந்துவிடுங்கள்.
பின் அடுப்பை பற்ற வைத்து அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்கவைக்கவும்.
முதலில் அடுப்பை 20 நிமிடம் Low Flame-யில் வைத்து கொதிக்க வைக்கவும்.. 20 நிமிடம் கழித்து அடுப்பை High Flame வைத்து தண்ணீரை கொதிக்கவிட வேண்டும்.
இடையில் அவ்வப்போது கரண்டியை பயன்படுத்தி பாத்திரத்தில் எங்கு அடிபிடித்துள்ளதோ அந்த இடத்தை சுரண்டிவிடுங்கள்.
அதேபோல் பேக்கிங் சோடா சேர்த்திருப்பதால் அடுப்பை High Flame-யில் வைக்கும் போது பொங்கி வரும் அப்போது மட்டும் அடுப்பை Low Flame-ற்கு மாற்றிக்கொள்ளுங்கள். பிறகு ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை Off செய்திடவும்.
இப்படி செய்யும் போது பாத்திரத்தில் அடிப்பிடித்திருக்கும் கறைகள் தனியாக வந்துவிடும். பின் நீங்கள் பாத்திரம் தேய்க்கும் ஸ்கிரப்பரை கொண்டு பாத்திரத்தை தேய்த்து எடுத்தால் போதும் அவற்றில் உள்ள கறைகள் அனைத்தும் அகன்றுவிடும்.
ஒருமுறை இந்த டிப்ஸை ட்ரை செய்துபாருங்கள் நீங்களே வியந்து போவீர்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாத்ரூம் டைல்ஸ் எவ்வளவு பழையதாக இருந்தாலும் புதிதாக மாற்ற இந்த ஒரு பொருள் போதும்
| மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |














