கருகிய பாத்திரம் எதுவா இருந்தாலும் தேய் தேய்யுனு தேய்க்காம ஈஸியா சுத்தம் செய்ய டிப்ஸ்..!

Advertisement

Burnt Vessel Cleaning Tips in Tamil

பொதுவாக சமையல் என்றாலே அதில் பல வகைகள் அடங்கியிருக்கும். அப்படிப்பட்ட சமையலை சமைப்பதற்கு ஒவ்வொரு பாத்திரமானது தேவைப்படும். ஏனென்றால் ஒரே பாத்திரத்தில் நாம் அனைத்து வகையான சமையலையும் சமைக்க முடியாது. ஆகவே சமையலுக்கு ஏற்றவாறு பாத்திரங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். அந்த வகையில் பார்த்து பார்த்து சமைத்து கொண்டிருக்கும் பாத்திரங்கள் ஆனது சில நேரத்தில் கருகி போய்விடும். இவ்வாறு கருகிய பாத்திரத்தை எளிமையாக சுத்தம் செய்யவே முடியாது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் இனி நீங்கள் இதுமாதிரி கஷ்டப்பட வேண்டிய அவசியம் கிடையாது. ஏனென்றால் கஷ்டமே இல்லாமல் கருகிய பாத்திரத்தை மிகவும் எளிமையான முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கருகிய பாத்திரத்தை சுத்தம் செய்ய டிப்ஸ்:

கருகிய பாத்திரம் எதுவாக இருந்தாலும் அதனை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் இந்த கருகிய பாத்திரத்தை வைத்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து விடுங்கள்.

  • எலுமிச்சை பழம்- 1/2
  • சால்ட் உப்பு- 1 ஸ்பூன்
  • துணி துவைக்கும் பவுடர்- 1 ஸ்பூன்
  • வினிகர்- சிறிதளவு

how to clean burnt vessel in tamil

இப்போது கடாயில் உள்ள பொருளுடன் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் ஒன்று ஒன்றாக சேர்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பில் உள்ள தண்ணீரை நன்றாக கொதிக்க விடுங்கள்.

இவ்வாறு கொதிக்கும் போது உங்களுடைய வீட்டில் பால் பொங்குவது போல நன்றாக கொதிக்க விடுங்கள். இத்தகைய முறையில் 3 முறை கொதிக்க விடுங்கள். அதன் பிறகு ஒரு தட்டை வைத்து அந்த தண்ணீரை மூடி வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

பின்பு 15 நிமிடம் கழித்து மூடி வைத்த பாத்திரத்தை திறந்து ஒரு ஸ்பூனால் நன்றாக தேய்த்து கொள்ளுங்கள்.

இதனை தொடர்ந்து பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை கீழே ஊற்றி விட்டு சாதாரணமாக பாத்திரம் கழுவுவது போல தேய்த்து கழுவினால் போதும் கருகிய பாத்திரம் அல்லது அடிபிடித்த பாத்திரம் பளிச்சென்று மாறிவிடும்.

வெறும் 5 நிமிடம் போதும் சிங்க் அடைப்பை அசால்ட்டா நீக்கி விடலாம் 

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement