கார் பராமரிப்பு
கார் நமது கனவுகளில் ஒன்றாக இருக்கும். அந்த காரை பராமரிப்பது என்பது கஷ்டமான விஷயமாக இருந்தாலும் மிகவும் முக்கியமானது. காரை சரியாக பராமரிக்கவில்லை என்றால் கண்டிப்பாக நமது கார் வாங்க நாம் மேற்கொண்ட உழைப்பு வீணாகிவிடும். மழைக்காலங்களில் வீடுகளை பராமரிப்பதே நமக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும். அதில் காரையும் பராமரிப்பது என்பது சிக்கலான காரியம் தான் ஆனால் அதனை நாம் முறையாக செய்யவில்லை என்றால் ஆபத்து உருவாக நாமே காரணம் ஆகிவிடுவோம்.
இன்றைய பதிவில் மழைக்காலங்களில் கார்களை பராமரிப்பது எப்படி ? மழைக்காலங்கள் தொடங்கும் முன்னர் நாம் கார்களில் என்ன விதமான சோதனைகள் செய்ய வேண்டும். கார்களில் ஏற்படும் சிறு மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகள் அதில் இருந்து நமது காரை பாதுகாப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
மழைக்காலங்களில் காரை பாதுகாப்பது எப்படி?
காரின் டயரில் போதுமான ட்ரெட் உள்ளதா என்பதை சோதிக்க வேண்டும். மழைகாலங்களில் ஏற்படும் மாசுவினால் ட்ரெட் கிரிப் கொடுக்காது. இதனால் மழைக்காலங்களில் ஈரப்பதத்தால் டயரின் கடினத்தன்மை குறைந்து ஆபத்தை உண்டாக்கும்.
ஹெட்லைட்டுகள் சரியான அளவில் ஃபோகஸ் செய்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளவும். இல்லையெனில் அதை சரியான தூரத்திலும், இடத்திலும் ஃபோகஸ் செய்யும் வகையில் சரிசெய்வது அவசியம்.
Car Care Tips in tamil:
மழை அதிகம் பாதிக்கப்படுவது பிரேக்குகள் தான். பிரேக் மற்றும் ஆக்சிலேட்டர் மேல் பொருத்தப்படும் புட் கவர்கள் தேய்ந்து இருந்தால் மாற்றிவிடுவது அவசியம். இல்லையென்றால் அவை தேய்ந்து பிரேக் டிரம்மிலேயே தங்கிவிடும். அது பிரேக் செயல்படாமல் போக காரணமாக அமைந்து விடும். பிரேக்களின் உருவாகும் தூசு, துரு, அழுக்கு ஆகியவற்றைச் சுத்தம் செய்ய பிரேக் க்ளீன் ஸ்பிரே பயன்படுத்துங்கள். இதனால் பிரேக் பிடிக்கும்போது கேட்கும் `கீச் கீச்’ சத்தமும் இருக்காது.
வைப்பர் எப்போதும் சரியாக உள்ளதா என்பதை ஆராய வேண்டும். காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன் வைப்பர் on செய்ய கூடாது. அப்படி On செய்வதால் வைப்பர் மோட்டாரின் ஃப்யூஸ் உடைய வாய்ப்பு உள்ளது.
கார் பயணத்தை தொடங்கும் முன் விண்டுஷீல்டை சுத்தம் செய்வது சிறந்தது.
மழைக்காலங்களில் கார்களில் அதிகப்படியான மாசு சேரும் அதனை தினமும் சுத்தம் செய்தலும் மலைகளில் உள்ள அமிலங்கள் காரின் நிறத்தை வெளிப்புறத்தில் பாதிக்கும். அதனால் கார்களின் வெளிப்புறத்தில் மெழுகு கோட் சேர்க்கலாம்.
மழைகாலங்கள் இரவு நேரங்களில் காரை மரத்தின் கீழ் நிறுத்தாமல் இருப்பது சிறந்தது. காரை வெளிப்புறங்களில் நிறுத்திவைக்கும் போது அதனை கவர் கொண்டு முடி வைக்கலாம்.
பயணத்திற்கு பிறகு காரில் உள்ள மிதியடிகளி உடனே சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் மழைகாலங்களில் துர்நாற்றம் ஏற்படும்.
பரபரப்பான காலை வேளையை சமாளிக்க என்ன செய்யலாம் ?
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |