காரில் எலி தொல்லை இல்லாமல் இருக்க மிளகை இப்படி பயன்படுத்துங்க..!

Advertisement

காரில் எலி தொல்லை நீங்க

வீட்டில் தான் எலி தொல்லை அதிகமாக இருக்கிறது என்றால் காரில் அதற்கும் மேல். நாம்  நம்முடைய தேவைக்காக சம்பள பணத்திலோ அல்லது கடனுக்கு லோன் வாங்கியோ காரினை வாங்கி இருப்போம். இவ்வாறு நாம் வாங்கிய காரில் எலி ஆனது நமக்கு நஷ்டத்தினை ஏற்படு த்தும் வகையில் சேதத்தினை ஏற்படுத்துவிடும். அதோடு மட்டும் இல்லாமல் சில நேரத்தில் பெரிய ஓட்டைகளை கூட போட்டு விட்டு ஓடி விடும். அதனால் இன்றைய பதிவில் இது போன்ற பிரச்சனைகள் இனி வராமல் இருப்பதற்கான டிப்ஸினை தான் பார்க்கப்போகிறோம். அதாவது காரில் எலிகளின் தொல்லை இல்லாமல் இருப்பதற்கான எளிய குறிப்பினை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

How to Avoid Rats in Car Naturally:

டிப்ஸ்-1

  • புதினா எண்ணெய்
  • காட்டன் துணி 

 காரில் எலி தொல்லை நீங்க

முதலில் நீங்கள் கடைகளில் விற்கும் புதினா எண்ணெயினை வாங்கி அதில் உங்களுக்கு தேவைப்படும் அளவில் உள்ள எண்ணெயினை ஒரு பவுலில் ஊற்றி கொள்ள வேண்டும்.

இப்போது சிறிய சிறிய காட்டன் துணியாக 2 அல்லது 3 பீஸ்களை எடுத்துக்கொண்டு அதனை புதினா எண்ணெயில் நனைத்து பந்து போல சுருட்டி கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

அடுத்து அந்த பந்தினை உங்களுடைய காரில் எலி வரும் பகுதியில் வைத்து விட்டால் போதும். எலி உங்களுடைய காரை எட்டிக் கூட பார்க்காது. மேலும் காரை ஓட்டும் போதும் அந்த உருண்டையினை வெளியே எடுத்து விட்டு பின்பு ஓட்டுங்கள்.

ஒரே கொசு தொல்லையா இருக்கா..  அப்படினா கொசு தொல்லையில இருந்து தப்பிக்க இதை தெரிஞ்சுக்கோங்க 

டிப்ஸ்- 2

  1. மிளகு 
  2. காட்டன் துணி

eli thollai neenga

சமையலுக்கு பயன்படுத்தும் மிளகில் 4 அல்லது 5 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த மிளகை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பவுடர் போல அரைத்து அதனை ஒரு பவுலில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது காட்டன் துணியினை சிறு சிறு உருண்டையாக உருட்டி அதனை மிளகு பவுடரில் நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

மிளகு பவுடரில் கலந்து தயார் நிலையில் வைத்துள்ள பந்தினை காரில் எலி வரும் இடங்களில் வைத்து விட வேண்டும். இவ்வாறு வைப்பதன் மூலம் மிளகின் காரத் தன்மையால் எலி வரவே வராது. மேலும் கார் ஓட்டுவதற்காக முன்பாக இந்த துணையினை வெளியே எடுத்து விட வேண்டும்.

ஈ தொல்லை அதிகமாக இருக்கிறதா..அப்போ இதை ட்ரை பண்ணுங்க ஒரு ஈ கூட இருக்காது

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement