Chapati Ingredients List
சமையல் என்பது ஒரு அருமையான கலை. இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே சமையல் கைப்பக்குவம் நன்றாக இருக்கும். அதிலும் குறிப்பாக சமையலில் அளவு என்பது மிகவும் முக்கியமாக ஓன்று. அது சமையல்காரர்களுக்கு மட்டுமே நன்கு தெரியும். அதாவது, இத்தனை நபர்களுக்கு சமைக்க வேண்டுமென்றால் இவ்வளவு பொருட்கள் தான் தேவைப்படும் என்பது உறுதியாக கூறுவார்கள். ஆனால் நமக்கோ அந்த அளவு என்பது தெரியாது. வீட்டில் உள்ள நபர்களுக்கு சமைக்க வேண்டுமென்றால் எப்போதும்போல் சமைத்துவிடுவோம். அதுவே நம் வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்கு சமைக்க எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் என்பது தெரிவதில்லை. எனவே அதனை தெரிந்து கொள்ளும் வகையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்றான சப்பாத்தியை 10 பேருக்கு சமைக்க எவ்வளவு மாவு தேவைப்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
10 பேருக்கு சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள் |
அளவுகள் |
கோதுமை மாவு |
6 1/4 கப் |
உப்பு |
தேவைக்கேற்ப |
நெய் |
2 1/2 ஸ்பூன் |
தண்ணீர் |
தேவைக்கேற்ற |
சப்பாத்தி மாவு பிசையும் முறை:
முதலில் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் அருகில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவினை சேர்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்போது, இந்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். அதாவது, சப்பாத்தி மாவு கட்டி இல்லாமல் சாஃப்ட்டாக மாறும்வரை பிசைந்து கொள்ளுங்கள். அதன் பிறகு, இதனுடன் நெய் சேர்த்து கலந்து 10 நிமிடம் வரை ஊறவிடுங்கள். அதன் பிறகு, சிறிய சிறிய உருண்டையாக பிடித்து வைத்து கொள்ளுங்கள். இறுதியாக, பிடித்து வைத்த உருண்டையை சப்பாத்தி கல்லில் வைத்து தேய்த்து சப்பாத்தியை சுட தொடங்குங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 10 பேருக்கு இட்லி வேணும் என்றால் எவ்வளவு அரிசி உளுந்து தேவைப்படும்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் |
Tips |