Chettinad Chicken Varuval
அசைவ உணவுகளில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். அதிலும் சிக்கன் குழம்பை விட சிக்கன் வறுவலை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் செட்டிநாடு சுவையில் செய்து கொடுத்தால் இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். எனவே நீங்கள் வீட்டிலேயே செட்டிநாடு சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்பதை இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Chettinad Chicken Varuval Recipe in Tamil:
ஸ்டேப் -1
முதலில் அடுப்பில் ஒரு வாணலை வைத்து 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் 1/2 ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிய விடுங்கள்.
ஸ்டேப் -2
அதன் பிறகு, 2 கொத்து கருவேப்பிலை மற்றும் 2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு சிவரும் வரை வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
அடுத்து இதனுடன் இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
பின், பொடியாக நறுக்கிய 1 தாக்களி மற்றும் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5
இதனுடன் 1 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட்டு சுத்தம் செய்துள்ள 1/2 கிலோ சிக்கனை சேர்த்து நன்கு கிளறி 1/2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடுங்கள்.மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
ஸ்டேப் -6
இதேபோல் 2 துண்டு பட்டை, 3 கிராம்பு, 3 ஏலக்காய், 1/2 டீஸ்பூன் மிளகு, 1 அன்னாசி பூ, 3 காய்ந்த மிளகாய், 1/2 ஸ்பூன் சீரகம், 4 ஸ்பூன் மல்லி மற்றும் 1/2 ஸ்பூன் சோம்பு சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -7
இதனை சிறிது நேரம் ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இதனை சிக்கனில் சேர்த்து நன்கு கிளறிவிட்டு கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப் -8
இந்நிலையில் தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான செட்டிநாடு செட்டிநாடு சிக்கன் வறுவல் ரெடி..!
ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரை எப்பா என்ன சுவை
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |