செட்டிநாடு மசாலா பொடி செய்முறை..!

Advertisement

Chettinad Masala Powder Ingredients in Tamil

பொதுவாக சமைப்பதில் அதிக வகைகள் உள்ளது. அதில் சிலருக்கு சில வகையான மாடல்களில் செய்யும் சமையல்கள் பிடிக்கும். ஆனால் அதிகளவு சமையல் பிடிக்கும் என்றால் அது செட்டிநாடு சமையலாக தான் இருக்கும். ஏனென்றால் செட்டிநாடுக்கு என்று தனி பெரும் அடையாளம் இருக்கும். அதேபோல் அந்த ஊரில் இருக்கும் மசாலாவிற்கு தனி ருசி உள்ளது. அனைவருமே அதற்கு மட்டும் ஏன் அவ்வளவு ருசியான சமையல் செய்ய முடிகிறது என்று கேள்வி இருக்கும். ஆகவே இந்த பதிவின் வாயிலாக செட்டிநாடு மசாலா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

வீட்டிலேயே மட்டன் பிரியாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள்..!

Chettinad Masala Powder Ingredients in Tamil:

  • பட்டை – 17 கிராம்
  • கிராம்பு –15 கிராம்
  • ஏலக்காய் – 15 கிராம்
  • நட்சத்திர சோம்பு – 15 கிராம்
  • மராத்திமொக்கு – 15 கிராம்
  • ஜாதிபத்திரி – 15 கிராம்
  • கல்பாசி – 10 கிராம்
  • சீரகம் – 15 கிராம்
  • சோம்பு – 10 கிராம்
  • கசகசா – 15 கிராம்
  • மிளகு – 40 கிராம்

கொத்தமல்லி விதைகள் – 15 கிராம் அனைத்தையும் மிதமான தீயில் வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

  • கொப்பரை தேங்காய் – 50 கிராம்
  • வரமிளகாய் – 20 அல்லது 25 கிராம்

இந்த இரண்டு பொருளையும் தனியாக வறுத்துக் கொள்ளவும். இப்போது மேல்கூறிய பொருட்கள் அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் ஒரு பாட்டிலில் போட்டு அடைத்துக் கொள்ளவும்.

இதையும் செய்து பாருங்கள் 👉👉👉 செட்டிநாடு மசாலா செய்ய தேவையான பொருட்கள்..! 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement