செய்யும் பொழுதே சுவைக்க தூண்டும் Chicken Ghee வறுவலை இப்படி ஒரு முறை செய்யுங்க..

Advertisement

Chicken Ghee Roast Recipe in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே உணவு என்றால் மிக மிக பிடிக்கும். அந்த உணவை நாம் இரண்டு வகையாக பிரித்து வைத்துள்ளோம். அதாவது சைவ உணவு மற்றும் அசைவ உணவு. இதில் சைவ உணவு வகையை சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் அசைவ உணவினை சிலருக்கு மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவினை மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்த ஒரு உணவுவகை என்றால் அது சிக்கன் தான். அதனால் அப்படி சிக்கன் மிகவும் பிடித்த நபர்கள் அனைவருமே அதனை அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் சிக்கனை ஒரே மாதிரி செய்து சுவைப்பது என்பது அவ்வளவாக பிடிக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவு வகையில் தான் இன்றைய பதிவில் Chicken Ghee வறுவல் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சிக்கன் நெய் வறுவல் செய்முறை:

Chicken Roast Recipe in Tamil

அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு வகையான சிக்கனை பயன்படுத்தி Chicken Ghee வறுவல் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  1. சிக்கன் – 3/4 கிலோ
  2. மஞ்சள்தூள் – 1/4 டேபிள் ஸ்பூன் 
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
  4. தயிர் – 4 டேபிள் ஸ்பூன் 
  5. வெங்காயம் – 1 
  6. காய்ந்த மிளகாய் – 12
  7. புளி – 1 நெல்லிக்காய் அளவு 
  8. மிளகு – 1 டேபிள் ஸ்பூன் 
  9. கொத்தமல்லி விதை – 3 டேபிள் ஸ்பூன்
  10. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் 
  11. பெருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் 
  12. கிராம்பு – 2
  13. முந்திரி – 10 
  14. நெய் – 4 டேபிள் ஸ்பூன் 
  15. கருவேப்பிலை – 1 கொத்து 
  16. உப்பு – 2 டேபிள் ஸ்பூன் 
  17. தண்ணீர் – 1/2 கப் 

காலை உணவை ருசியாக்கும் இந்த ரெசிபிக்கு வெறும் 10 நிமிடம் போதும்

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 3/4 கிலோ சிக்கனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள், 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 4 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 வெங்காயம், 12 காய்ந்த மிளகாய், 1 நெல்லிக்காய் அளவு புளி, 1 டேபிள் ஸ்பூன் மிளகு, 3 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை, 1 டேபிள் ஸ்பூன் சீரகம், 1 டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம், 2 கிராம்பு, 10 முந்திரி மற்றும் 1/2 கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு இருந்தா போதும் Simple ஈவினிங் டீ டைம் ஸ்னாக்ஸ் தயார்

ஸ்டேப் – 3

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து அதனுடன் 1 கொத்து கருவேப்பிலை மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

Chicken Recipe in Tamil

அது நன்கு வதங்கிய உடனே அதனுடன் நாம் கலந்து வைத்துள்ள சிக்கன் கலவை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பின்னர் ஒரு 25 நிமிடங்கள் நன்கு வேக வைத்து எடுத்தால் நமது சுவையான Chicken Ghee வறுவல் தயார்.

வஞ்சரம் மீன வச்சி கோலா உருண்டையா புதுசா இருக்கே

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement