நினைவு திறனை அதிகரிக்க
வணக்கம் நன்பர்களே.! இன்றைய பதிவில் குழந்தைகளின் நினைவாற்றலை அதிகப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம். சில குழந்தைகள் பிறந்த கொஞ்ச நாளிலே புத்தி கூர்மையுடன் காணப்படுவார்கள். சில குழந்தைகள் வளர வளர புத்தி கூர்மையுடன் காணப்படுவார்கள். குழந்தைகளை வளர்க்கும் முறையில் தான் அவர்கள் புத்தி கூர்மையுடன் காணப்படுவார்கள். வாங்க எப்படி என்று தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்..!
விளையாட்டுகள் சதுரங்கம்:
குழந்தைகளின் நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கு விளையாட்டுகளும், கேம்கள் விளையாட சொல்லலாம். சதுரங்க விளையாட்டு அறிவுபூர்வமான விளையாட்டு. இந்த விளையாட்டு விளையாடுவதினால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
குழந்தை தூக்கம்:
குழந்தைகள் தூக்கம் ரொம்ப முக்கியமானது. குழந்தைகளின் நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கு 8 அல்லது 10 மணி நேரம் தூங்க வேண்டும். தினமும் சரியான நேரத்திற்கு தூங்க வேண்டும். இப்படி செய்வதனால் குழந்தையின் நினைவாற்றல் அதிகரிக்கும்.
குழந்தை மன அழுத்தம்:
குழந்தைகளின் மனது புண்படும்படி நடந்து கொள்ளாதீர்கள். குழந்தைகள் மன அழுத்தம் பிரச்சனை ஏற்படுவதால் நினைவாற்றலை பாதிக்கும். குழந்தைகளை எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்து கொள்ளுங்கள்.
காய்கறிகள் சாப்பிடுவது:
பச்சை காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும். பச்சை காய்கறிகளில் வைட்டமின்கள், ஆன்ட்டி-ஆக்சிடெண்ட்ஸ், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின்கள் எ,பி , சி, டி மற்றும் கே போன்ற வைட்டமின்கள் குழந்தைகளின் நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கு உதவுகிறது.
சத்துள்ள உணவுகள்:
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு சத்துள்ள உணவுகளை கொடுப்பது அவசியமானது. அந்த வகையில் பாதாம், நிலக்கடலை, பிஸ்தா மற்றும் முந்திரி ஆகிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை தர வேண்டும். அதோடு கீரை வகைகளையும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இப்படி கொடுப்பதனால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும்.
படங்கள் மூலம்:
உங்கள் குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லி கொடுக்கும் போது படங்கள் அல்லது வீடியோ மூலமாக கர்ப்பிப்பது அவர்களின் கற்பனை திறனை அதிகரிக்கும். பாடங்களின் மீது ஆர்வமும் அதிகரிக்கும். புத்தி கூர்மையுடன் காணப்படுவார்கள்.
முட்டை சாப்பிடலாம்:
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் டிஹெச்ஏ போன்ற கொழுப்புகளால் ஆனது மூளை. இந்த சத்துக்கள் முட்டை மற்றும் சால்மன் மீன்களில் காணப்படுகிறது. இந்த சத்துக்கள் மூளை மற்றும் நரம்பு செல்களை வலுப்படுத்தி நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |