பிரிட்ஜ் சுத்தம் செய்தல்
நமது சமையலறையில் இருக்க கூடிய முக்கிய பொருட்களில் குளிர்சாதனபெட்டி எனப்படும் பிரிட்ஜியும் ஒன்று. என்னதான் வீட்டில் மற்ற வீட்டுசாதன பொருட்களை சுத்தம் செய்தலும். பிரிட்ஜ் சுத்தம் செய்வது என்பது தனி. இதில் உணவுப்பொருட்கள் முதல் காய்கள் மற்றும் பழங்கள் வரை நாம் சேமித்து வைப்போம். அதனை பயன்படுத்துவதை பொறுத்து பிரிட்ஜ் ஆயுட்காலம் நீடிக்கும். உணவுப்பொருட்களின் ஆயுட்காலம் நீட்டிக்க நாம் பிரிட்ஜ் பயன்படுத்துகின்றோம். ஆனால் பிரிட்ஜ் ஆயுட்காலம் நீட்டிக்க அதனை முறையாக பராமரிக்க வேண்டும். பிரிட்ஜ் எப்படி சுத்தம் செய்வது ? இது நாம் அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு சிக்கலான விஷயமாக தான் இருக்கும். ஆனால் பிரிட்ஜ் நாம் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வாருங்கள் இன்றைய பதிவில் பிரிட்ஜ் எவ்வாறு எளிமையாக சுத்தம் செய்வது என்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
பிரிட்ஜினை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள:
பிரிட்ஜ் சுத்தம் செய்ய்ய பயன்படுத்தும் பொருட்கள்:
- பேக்கிங் சோடா
- வினிகர்
பிரிட்ஜ் உட்புற சுத்தம்:
பேக்கிங் சோடா ஒரு கப் வெந்நீரில் நன்கு கலந்துகொள்ளுங்கள். அதனுடன் வெள்ளை வினிகர் கலந்து, அதனை பல் துலக்கும் பிரஷ் கொண்டு உங்கள் பிரிட்ஜை சுத்தம் செய்யலாம்.
மீண்டும் வெள்ளை வினிகரை மட்டும் ஒரு காட்டன் துணியில் நனைத்து பிரிட்ஜ் முழுவதும் துடைக்க வேண்டும்.
நீங்கள் மற்ற வாசனைமிக்க பொருட்களை கொண்டு சுத்தம் செய்யும் போது உணவுகளின் சுவை மற்றும் மணம் மாற வாய்ப்புள்ளது.
நேர மேலாண்மை:
பகுதி பகுதியாக சுத்தம் செய்வதை விட அனைத்து பொருட்களையும் எடுத்துவிட்டு சுத்தம் செய்வது நல்லது. இதனால் உங்களுக்கு நேரம் மிச்சமாகும். பொருட்களின் தரத்தையும் பிரிக்க முடியும்.
அடுக்குகளை வெளியே எடுத்து, அதனை வெதுவெதுப்பான நீரில் சோப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து அதில் ஊறவைத்து அழுக்குகளை நீக்கலாம். அடுக்குகளை சுத்தம் செய்த பின்னர் உட்புறத்தை சுத்தம் செய்வது நல்லது.
வாசனைக்கு:
சுத்தம் செய்த பின்னர் ஏற்படும் மாறுபட்ட வாசனை நீங்க உங்கள் பிரிட்ஜின் ஏதேனும் ஒரு அடுக்கில் எலுமிச்சை பழத்தை வையுங்கள். இது மற்ற விரும்பத்தகாத வாசனைகளை உறிஞ்சும்.
நீங்கள் பிரிட்ஜ் சுத்தம் செய்யும் முன் மின் இணைப்புகளை துண்டிப்பது நல்லது. மின் இணைப்புகளால் ஏற்படும் பாதிப்புகளை இவற்றின் மூலம் குறைக்கலாம். மின் இணைப்புகளையும் இவற்றின் மூலம் சரி செய்யலாம்.
பிரிட்ஜ் வெளிப்புற சுத்தம்:
இப்போது பிரிட்ஜின் வெளிப்புறத்தை சுத்தம் செய்ய முதலில் காட்டன் துணியால் துடைத்து விடவும். பின்னர் ஒரு கப்பில் தண்ணீரை அதில் காப்பர் இல்லாத சலவை தூள் சேர்த்து நன்கு கலக்கி அதனை துணியால் நனைத்து பிரிட்ஜை துடைக்கவும், பின்னர் தண்ணீர் கொண்டு துடைக்கவும். கடைசியாக காய்ந்த துணியை பயன்படுத்தி துடைக்க வேண்டும்.
மேல சொல்லப்பட்ட குறிப்புகளை கொண்டு உங்க வீட்டு பிரிட்ஜினை எப்போதும் சுத்தமாகவும் பளிச் என்றும் வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |