Cleaning Bathroom With Lemon
பாத்ரூம் கிளீன் செய்வது ரொம்ப கஷ்டமான வேலையாக இருக்கும். பாத்ரூம் கட்டிய புதிதில் பளிச்னென்று இருக்கும். ஆனால் நாளடைவில் பாத்ரூம் விடாப்பிடியான கறைகள் வந்து விடும். சில நபர்கள் தினமும் பாத்ரூமை கிளீன் செய்வார்கள். ஆனால் அதில் உள்ள கறைகள் மட்டும் நீங்கியிருக்காது. காரணம் கடையில் விற்கும் liquid-யை பயன்படுத்திருப்பீர்கள். அதனால் இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருள் எலுமிச்சையை வைத்து பாத்ரூமை எப்படி கிளன் செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Cleaning Bathroom With Lemon:
முதலில் 5 எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக கட் செய்து கொள்ளவும். கட் செய்த எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு பிழிந்த எலுமிச்சை பழத்தை மிக்சியில் சேர்த்து கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அரைத்த எலுமிச்சை பழத்தை பேஸ்ட்டை சக்கை இல்லாமல் வடிக்கட்டி கொள்ளவும். அதனுடன் பேக்கிங் சோடா 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். உப்பு 1 தேக்கரண்டி, துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர், comfort ஒரு மூடி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த Liquid-யை பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ளவும்.
உப்பு கறை படிந்த பாத்ரூமை சிரமம் இல்லாம இப்படி கிளீன் பண்ணுங்க..!
இந்த பல்லின் மூடியில் சிறியதாக ஓட்டை போட்டு கொள்ளவும். இந்த LIQUID-யை கறை உள்ள இடத்தில் ஊற்றி 10 நிமிடம் ஊற விடவும். பிறகு பிரஷை பயன்படுத்தி தேய்த்தால் பளிச்சென்று மாறிவிடும்.
உங்களுடைய பாத்ரூம் வெஸ்டர்ன் ஆக இருந்தாலும் சரி, இந்தியன் டாய்லெட் ஆக இருந்தாலும் சரி, அதன் மேல் எலுமிச்சை LIQUID-யை ஊற்றி விட்டு 20 நிமிடம் கழித்து தேய்த்தால் பளிச்சென்று மாறிவிடும்.
பாத்ரூம் மட்டுமில்லை வீட்டில் எங்கெல்லாம் விடாப்பிடியான கறைகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் இந்த Liquid-யை பயன்படுத்தி தேய்த்தால் கறைகள் நீங்கிவிடும்.
பாத்ரூம் முழுவதையும் சுத்தம் செய்வதற்கு இதை மட்டும் செய்யாமல் இருக்காதீர்கள்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |