Cleaning Liquid At Home
பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இருக்கும் வேலையை விட வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு வேலை அதிகமாகவே இருக்கும். பாத்திரம் கழுவது, துணி துவைப்பது, சமைப்பது மற்றும் வீட்டை சுத்தம் செய்வது போன்ற பல வேலைகள் இருக்கிறது. அப்படி இல்லத்தரசிகளுக்கு இருக்கும் வேலைகளில் இதுவும் ஓன்று.
பொதுவாக வீட்டில் கிச்சன், தரை போன்ற இடங்களில் கறை அதிகமாக படியும். நாமும் படிந்திருக்கும் கறையை சுத்தம் செய்வதற்கு என்னென்னமோ செய்வோம். ஆனால் கைகளில் வலி வந்தது தான் மிச்சம் என்று சொல்லி புலம்புபவரா நீங்கள்..? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு. அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Cleaning Liquid At Home in Tamil:
- ஆரஞ்சு பழத்தின் தோல் – தேவையான அளவு
- ஆல்கஹால் லிக்விட் – 1/2 கப்
- வினிகர் – 1/2 கப்
- டிஷ் வாஷ் லிக்விட் – 1/2 கப்
ஸ்டேப் -1
முதலில் ஒரு கண்ணாடி அல்லது சாதாரண பாட்டில் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் 2 அல்லது 3 ஆரஞ்சு பழத்தின் தோலை போட வேண்டும்.
ஸ்டேப் -2
பின் அதில் ஆல்கஹால் லிக்விட் 1/2 கப் அளவிற்கு சேர்த்து கொள்ள வேண்டும். கடைகளில் ஆல்கஹால் லிக்விட் என்று கேட்டால் தருவார்கள். அதை வாங்கி கொள்ளவும்.
உங்கள் வீடு எப்பொழுதும் வாசனையாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க..! |
ஸ்டேப் -3
பிறகு அதில் வினிகர் 1/2 கப் அளவிற்கு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு டிஷ் வாஷ் லிக்விடை 1/2 கப் அளவிற்கு அதில் சேர்த்து கொள்ளவும்.
ஸ்டேப் -4
பின் கடைசியாக தண்ணீர் தேவையான அளவு சேர்த்து இதை குறைந்தது 6 மணிநேரம் அப்படியே ஊறவைக்க வேண்டும்.
பின் இந்த லிக்விடை வேற ஒரு பாட்டிலில் வடிகட்டி உங்கள் வீட்டில் கறை படிந்திருக்கும் இடங்களில் ஸ்ப்ரே செய்து துடைத்தால் அந்த இடம் பளிச்சென்று மாறிவிடும். இதுபோல நீங்களும் செய்து உங்கள் வீட்டை பளிச்சென்று மாற்றி கொள்ளுங்கள்.
பித்தளை பாத்திரங்கள் பளபளப்பாக இருக்க வீட்டிலேயே லிக்விட் செய்யலாம்..! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? |
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |