Cleaning Tips for Gas Stove
பொதுவாக இல்லத்தரசிகளுக்கு இந்த கேஸ் அடுப்பை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான வேலைகளில் ஒன்றாகும். அதிலும் வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம் கேஸ் ஸ்டவ் பிசுபிசுப்புடன் பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கும். வாரத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே அவர்கள் கேஸ் அடுப்பை சுத்தம் செய்வார்கள். அதிகம் பிசுபிசுப்புடன் இருக்கும் கேஷ் அடுப்பை குறித்த நேரத்தில், குறைந்த தண்ணீரை கொண்டு எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க போகிறோம். சரி வாங்க கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும், எப்படி சுத்தம் செய்யலாம் என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை பழம் – ஒன்று
- பேக்கிங் சோடா – இரண்டு ஸ்பூன்
- அடுப்பை சுத்தம் செய்ய தேவையான தண்ணீர்
- காட்டன் துணி – இரண்டு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் 10 ரூபாய் போதும் உப்பு கறை படிந்த பாத்ரூம் பளிச்சென்று ஆகிடும்..!
சுத்தம் செய்யும் முறை:
முதலில் எலுமிச்சை பழத்தை இரண்டாக கட் செய்துகொள்ளுங்கள். அவற்றில் ஒரு பாதியில் பேக்கிங் சோடாவை ஒரு ஸ்பூன் வைத்து கேஸ் அடுப்பில் எங்கெல்லாம் பிசுபிசுப்பாக மற்றும் கரையாக உளதோ அங்கெல்லாம் நன்றாக தேய்த்து விடுங்கள்.
பிறகு 15 நிமிடம் காத்திருக்கவும் பிறகு ஈரமான துணியால் கேஸ் அடுப்பை சுத்தமாக துடைத்து எடுக்கவும்.
பின்பு ஈரம் இல்லாத காட்டன் துணை எடுத்துக்கொள்ளுங்கள், அந்த துணியை பயன்படுத்தி அடுப்பை சுத்தமாக துடைத்து எடுத்தால் போதும் கேஸ் ஸ்டவ் பிசுபிசுப்பு நீங்கி பளிச்சென்று மாறிவிடும். கண்டிப்பாக இந்த டிப்ஸை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நாள் ரிசல்ட் கொடுக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இனி உடைத்த தேங்காய் ஒரு வருடம் ஆனாலும் கெட்டு போகாமல் இருக்க 3 டிப்ஸ்
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |