Cleaning Tips in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. எல்லாருமே வாரத்துக்கு இரண்டு முறை அல்லது ஒரு முறையாவது வீடு துடைப்போம். அப்படி துடைக்கும் இங்கு கூறப்பட்டுள்ள சில விஷயங்களை நீங்கள் செய்தீர்கள் என்றால் எறும்பு, ஈ, பூச்சிகள் தொல்லை உங்கள் வீட்டில் இருக்காது. மேலும் உங்கள் வீடு நன்கு வாசனையாகவும். மேலும் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று இப்பொழுது பார்க்கலாம்.
டிப்ஸ்: 1
வீடு துடைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள், பிறகு அதில் ஒருகைப்பிடியளவு கல் உப்பு, அந்துருண்டை சிறிதளவு நுனிக்கி சேர்த்துக்கொள்ளுங்கள், பிறகு ஒரு மூடி டெட்டால் சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள், அதன்பிறகு சிறிதளவு தசாங்கம் பவுடர் மற்றும் ஜவ்வாது சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
பிறகு இந்த தண்ணீரை கொண்டு வீட்டை துடைக்கவும். இப்படி வீடு துடைக்கும் போது வீடும் மிகவும் நறுமணமாக இருக்கும், இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். குறிப்பாக வீட்டில் எறும்புகள், பூச்சிகள், ஈ போன்றவை வீட்டிற்குள் வராமல் இருக்கும்.
டிப்ஸ்: 2
உங்கள் வீட்டு தரையிலோ அல்லது சுவற்றிலோ கறை படிந்திருந்தால் அதனை நீக்க ஒரு அருமையான டிப்ஸ் இருக்கிறது. அதற்கு ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, தண்ணீர் ஒரு டம்ளர் மற்றும் நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கறை உள்ள இடத்தில் தெளித்து விடுங்கள். பிறகு 5 நிமிடம் கழித்து அந்த இடத்தை துடைத்தீர்கள் என்றால் அவற்றில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
டிப்ஸ்: 3
வீட்டில் தூசிகள் படியாமல் இருக்க வேண்டும் என்றால் வீடு துடைப்பதற்கு முன் உங்கள் வீட்டில் உள்ள பேன், டிவி ஸ்டாண்ட், ஜன்னல் இவற்றை எல்லாம் வாரத்திற்கு ஒருமுறை துடைத்துவிடுங்கள். பிறகு வீட்டையும் மேலோட்டமாக ஒட்டடை அடிப்பதன் மூலம் வீட்டில் தூசிகள் படியாமல் இருக்கும். மேலும் வீடும் சுத்தமாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாத்ரூம் டைல்ஸ் எவ்வளவு பழையதாக இருந்தாலும் புதிதாக மாற்ற இந்த ஒரு பொருள் போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |