மழை சீசனில் துணிகளில் கரும்புள்ளி திட்டு திட்டாக வராமல் இருக்க எளிய குறிப்பு…!

Advertisement

Clothes Washing Tips in Tamil

மழைக்காலம் வந்தால் வீட்டை விட்டு வெளியேறவே பலருக்கும் பிடிக்காது. ஏனென்றால் நாம் வெளியில் செல்லும் போது எந்த நேரத்தில் மழை வரும், எந்த நேரத்தில் வெயில் வீசும் என்றே தெரியாது. ஆகையால் இப்படிப்பட்ட சிக்கலை தவிர்க்க பலரும் வீட்டை விட்டு வெளியே செல்ல மாட்டார்கள். இத்தகைய பிரச்சனை இல்லாமல் இருந்தாலும் கூட வீட்டில் துவைக்கும் துணிகள் காயாமல் இருப்பது மற்றொரு பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனை யாருக்கோ ஒருவருக்கும் மட்டும் வராமல் எல்லாரது வீடுகளில் மழைக்காலங்களில் சந்திக்ககூடிய ஒரு சிக்கலாக காணப்படுகிறது. ஆகையால் இன்று மழைக்காலங்களில் துணிகளில் பூஞ்சை போன்ற கரும்புள்ளிகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

துணிகளில் கறை நீங்க:

குறிப்பு- 1

மழைக்காலத்தில் துணிகளை துவைத்து முடித்த பிறகு அலசும் போது நீரில் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்த்து அலசுவது மிகவும் நல்லது. ஏனென்றால் இவை இரண்டும் துணிகளில் துறுநாற்றம் வராமல் இருக்க செய்யும்.

குறிப்பு- 2

துவைத்து முடித்த துணிகளை நன்றாக தண்ணீர் இல்லாமல் பிழிய வேண்டும். அப்போது தான் துணிகள் விரைவில் காயும். அதேபோல் வெயில் அடிக்கும் நேரங்களில் எல்லாம் துணிகளை வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.

குறிப்பு- 3

 துணிகளில் கறை நீங்க

உங்களுடைய வீட்டில் துவைத்த துணிகளை மடித்து வைக்கும் இடங்களை நன்றாக சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இத்தகைய பிரச்சைனையினாலும் துணிகளில் கருப்பு கறை வரும்.

குறிப்பு- 4

ஒருவேளை இவற்றை எல்லாம் செய்தும் உங்களது உடைகளில் கருப்பு வந்து விட்டது என்றால் அந்த இடத்தில் உப்பு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக தேய்க்க வேண்டும். அதன் பின்பு மீண்டும் துணியினை அலசி விட்டு காய  வைக்க வேண்டும்.

குறிப்பு- 3

அதேபோல் எலுமிச்சை பழத்திற்கு மாறாக நார்த்தங்காய் இருந்தால் அதனை தோலுடன் ஒரு வாளி தண்ணீரில் ஊற வைத்து விட்டு பின்பு துணிகளை அதில் ஊற வைத்து விட்டு 5 நிமிடம் கழித்து ஒருமுறை துவைத்து விட்டு அலசி காய வைத்தால் ஒரு கறை கூட இருக்காது.

தேங்காய் எண்ணெய் நீண்ட காலம் கெடாமல் சேமித்து வைப்பதற்கான டிப்ஸ் 

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement