கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா.! அப்போ இந்த ஒரு மருந்து போதும்..

Advertisement

Cockroach Killer Home Remedies in Tamil

வீட்டில் காணப்படும் பூச்சிகளின் தொல்லையில் கரப்பான் பூச்சிகள் முதலிடத்தில் உள்ளன. கரப்பான் பூச்சிகள் கெட்டதாகத் தெரிவது மட்டுமின்றி வீட்டின் பாத்திரங்களில் பொதுவாகத் தெரியாத அழுக்குகளை விட்டுச் செல்லும். இந்த பாத்திரங்களில் உள்ள உணவை சாப்பிட்டால் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். இந்த கரப்பான் பூச்சியை கொல்ல நினைத்தாலும் ஏதோ ஒரு இடத்தில் ஒளிந்து கொள்கிறது. அதுமட்டுமில்லாமல் காசு கொடுத்து பல கிரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் கரப்பான் பூச்சி ஒழிவதில்லை. அதனால் இந்த பதிவில் கரப்பான் பூச்சி தொல்லையிலுருந்து விடுபடுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து விடுபட:

கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து விடுபட

முதலில் ஒரு பாத்திரத்தில் வெந்நீர் எடுத்து கொள்ளவும். அதில் 2 தேக்கரண்டி பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளவும். இந்த கலவையை சிங்க் மற்றும் பாத்ரூம் போன்ற பகுதியில் தெளிக்கவும். மேலும் உங்க வீட்டில் கரப்பான் பூச்சி எங்கு வருமோ அந்த இடங்களிலெல்லாம் இந்த கலவையை தெளித்து ஒரு மணி நேரம் அப்படியே விடவும். பேக்கிங் சோடா வாசனைக்கு கரப்பான் பூச்சி இறந்து விடும்.

பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை:

கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து விடுபட

ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும். பேக்கிங் சோடா எவ்வளவு சேர்க்கிறீர்களோ அதே அளவிற்கு சர்க்கரையை கலந்து கொள்ளவும். இந்த கலவையை கரப்பான் பூச்சி உள்ள இடத்தில் தூவி விடவும். சர்க்கரைக்கு கரப்பான் பூச்சி இறந்து விடும்.

கரப்பான் பூச்சிக்கு எத்தனை இதயம் உள்ளன தெரியுமா..?

வேப்பிலை:

கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து விடுபட

வேப்பிலையில் இருக்கும் கசப்பு தன்மை பூச்சிகளை கொள்வதற்கு உதவுகிறது. அதனால் வேப்பிலை இலைகளை அரைத்து அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த சாற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை ஸ்ப்ரே பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். கரப்பான் பூச்சி உள்ள இடத்தில் இந்த கலவையை ஸ்ப்ரே செய்யவும்.

பிரியாணி இலை:

கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து விடுபட

சிறிதளவு பிரியாணி இலையை கரப்பான் பூச்சி உள்ள இடத்தில் வைத்தாலே போதும். கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது. இல்லையென்றால் பிரியாணி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இத்தனையும் கரப்பான் பூச்சி உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் கரப்பான் தொல்லை இருக்காது.

உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி வருகிறதா? அப்போ உங்கள் நிலைமை இப்படித்தான் இருக்கும்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement