Coconut Buy Tips in Tamil | தேங்காய் வாங்குவது எப்படி
நம் அனைவருக்குமே தினசரி அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் எப்படி வாங்குவது என்று தெரியும்..! அதேபோல் மற்றவர்களுக்கு பொருட்களை வாங்க தெரியும் என்றாலும் ஒரு சில பொருட்களை எப்படி வாங்கினாலும் அது நல்லா இல்லாமல் போய்விடும் அல்லவா..? அதேபோல நாம் நல்ல சகுனமாக பார்க்கும் பொருள் தான் தேங்காய். இந்த தேங்காய் எப்படி வாங்கினாலும் அது உள் பக்கம் நல்லா இல்லாமல் போய்விடும். தேங்காய் வாங்குவதற்கு என்று டிப்ஸ் உள்ளது. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!
Coconut Buy Tips in Tamil:
◊ முதலில் தேங்காயை கையில் எடுத்து அதனை ஒரு விரல் அல்லது இரண்டு விரல்களால் தட்டி பார்க்கலாம். அப்படி தட்டி பார்க்கும் போது அதில் கனீர் கனீர் என்று சத்தம் கேட்டால் அது நல்ல தேங்காய் என்று அர்த்தம். அதனை நாம் வீட்டிற்கு வாங்கி செல்லலாம்.
◊ ஆனால் அதுவே அப்படி தட்டும் போது போத் போத் என்று சத்தம் கேட்டால் அது நல்ல தேங்காய் இல்லை. ஆகவே அதனை வீட்டிற்கு வாங்கி செல்லாதீர்கள்.
◊ அதேபோல் ஒரு சில தேங்காய் ஒரு பக்கம் நல்ல சத்தம் வரும். ஆனால் ஒரு பக்கம் சத்தம் வாரது. அப்படி இருந்தால் ஒரு பக்கம் உள்ள தேங்காய் மட்டும் நல்லா இருக்கிறது. ஆனால் மற்றொரு பக்கம் மட்டும் நல்லா இல்லாமல் அழுகும் நிலைக்கு உள்ளது என்று அர்த்தம்.
பெண்கள் கூட கீழே இருந்தே தேங்காய் பறிக்கலாம்.. இதை மட்டும் வாங்கி வைச்சிக்கோங்க
◊ அதேபோல் நல்ல தேங்காயை இதுபோல் வாங்கலாம். அது என்னவென்றால் தேங்காயை எடுத்து காது பக்கத்தில் வைத்து அதில் தண்ணீர் உள்ளதா என்று அசைத்து பார்த்து வாங்கலாம். அதில் தண்ணீர் இருந்தால் தேங்காய் நல்ல தேங்காய் ஆகும். அப்படி தேங்காயில் தண்ணீர் இல்லையென்றால் அது கொப்பரை என்று அர்த்தம்.
◊ முக்கியமாக தேங்காயை வாங்கும் போது அதில் ஏதாவது விரிசல் இருக்கா அல்லது உடைந்து இருக்கா என்பதை பார்த்து வாங்க வேண்டும் .
◊ அதேபோல் உங்கள் வீட்டில் தேங்காய் வாங்கி வீட்டில் தென்னை மரத்தில் எப்படி இருக்குமோ அதேபோல் மேல் பக்கம் குடுமியை பார்த்து தான் வைக்கவேண்டும். அப்போது தான் தேங்காய் விரைவில் கெட்டு போகாமல் இருக்கும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |