பருப்பு வேக வைத்தால் தண்ணீர் வெளியே வந்து குக்கரை நாசம் செய்கிறதா.! இது போல் செய்யுங்கள்

cooker overflowing tips in tamil

குக்கரில் பருப்பு தண்ணீர் வழியாமல் இருக்க என்ன செய்வது.?

பெண்களுக்கு குக்கர் ஒரு வரம் தான். காலையில் பள்ளியில் செல்லும் குழந்தைகளுக்கு மற்றும் வேலைக்கு செல்லும் கணவர்களுக்கு சமைத்து கொடுக்க ஈசியாக இருக்கும். ஒரு அடுப்பில் சாதம் இன்னொரு அடுப்பில் குக்கரில் பருப்பை வேக வைத்து விடலாம். வேலை சீக்கிரமாக முடிந்துவிடும். ஆனால் குக்கரில் பருப்பு வைக்கும் போது தண்ணீர் பொங்கி வெளியே வரும். சீக்கிரமாக வேலையை முடிக்க பருப்பை குக்கரில் வைத்தால் அந்த குக்கரிலிருந்து பருப்பு தண்ணீர் வெளியே வரும் வேலையே இரண்டாக்கும். இதனை எப்படி தடுப்பது வாங்க படித்து தெரிந்துகொள்வோம்.

டிப்ஸ்:1

இன்றைய காலத்தில் குக்கர் இல்லாத வீடுகளே இல்லை. வேலையை சுலபமாக முடித்து விடுகிறது. சாதம் வைத்தாலும், பருப்பு வேக வைத்தாலும் அந்த தண்ணீர் பொங்கி வெளியே வந்துவிடும். மற்றபடி குக்கர் எந்த பிரச்சனையும் செய்யாது. குக்கரில் சமைத்தால் குறைவான நேரத்திலே சமைத்து விடலாம்.

குக்கரின் மூடியை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். குக்கரில் உள்ள பெல்ட்டை நன்றாக போட வேண்டும்.  குக்கரில் உள்ள விசிலை போடுவதற்கு முன் தண்ணீரில் போட்டு விட்டு பிறகு உபயோக படுத்துங்கள். பின் விசிலில் தூசி இல்லாமல் ஊதிவிட்டு போட வேண்டும். விசிலில் எண்ணெய் தடவி குக்கரை மூடினால் பருப்பு தண்ணீர் வெளியே வராது. 

டிப்ஸ்:2

குக்கரில் வேக வைக்கும் பொருளானது காய்கறி, பருப்பு அரிசி போன்றவற்றை வைத்து தண்ணீர் ஊற்றி வையுங்கள். தேவையான தண்ணீர் ஊற்றியவுடன் ஒரு சின்ன பாத்திரத்தை வையுங்கள். அதன் பிறகு குக்கரை மூடி வைத்து விடுங்கள். ஒரு சொட்டு தண்ணீர் கூட வெளியே வராது. இப்படி வைப்பதினால் பருப்பு தண்ணீரும் வெளியே வராது இன்னொன்று குழந்தைகளுக்கு சூப்பாக கொடுக்கலாம். எப்படியென்றால் பாத்திரத்தை வைக்கும் போது அதிலில் தண்ணீர் மட்டும் வந்துருக்கும். அதனால் காய்கறிகளால் உள்ள சத்துக்களும் கிடைக்கும்.

டிப்ஸ்:3

குக்கரில் மட்டுமில்லை அடுப்பில் பாத்திரம் வைத்தும் சமைக்கும் போது பருப்பு தண்ணீர் வெளியே வரும். அந்த பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டால் பருப்பு தண்ணீர் வெளியே பொங்கி வராது.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். குக்கரையும் வீணாக்காமல் உங்களின் வேலையும் குறையும்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com