½ நேரம் வேகும் சாதத்தை 5 நிமிடத்தில் வேகவைத்து வடிகட்டலாம்.. இது தெரியாம கேஸ் சிலிண்டரை வேஸ்ட் பண்ணாதீங்க..!

Advertisement

கேஸ் சிலிண்டர் விற்கிற விலைக்கு இந்த டிப்ஸ் தெரியாம இருக்காதீங்க!!! Cooking Gas Saving Tips in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. தங்கம் விலை ஒவ்வொரு நாள் உயர்வது போல், கேஸ் சிலிண்டரின் விலை மாதம் மாதம் உயர்ந்துகொண்டே போகிறது. காசு வைத்திருப்பவர்கள் தங்கமாக இருந்தாலும் சரி, கேஸ் சிலிண்டராக இருந்தாலும் சரி அது என்ன விலை விற்றாலும் அதனை எளிதாக வாங்கிக்கொள்வார்கள். ஆனால் அன்றாடம் வேலை செய்து மாதம் சம்பளம் குறைவாக வாங்கும் நடுத்தர மக்கள் என்ன செய்ய முடியும். முடிந்தவரை நாம் தான் நமது சக்திக்கு ஏற்றது போல் செலவு செய்ய வேண்டும். சரி இன்றிய பதிவு கேஸ் சிலிண்டரை மிச்சம் செய்ய நினைக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது நாம் ½ நேரம் அல்லது 1 மணி நேரம் வேக வைத்து வடிக்கும் சாதத்தை, மிக எளிதாக கேஸ் அடுப்பில் 5 முதல் 10 நிமிடத்தில் வேகவைத்துவிடலாம் அது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

½ நேரம் வேகும் சாதத்தை 5 நிமிடத்தில் வேகவைப்பது எப்படி?

முதலில் அரிசியை வேகவைப்பதற்கு முன் அரிசியை சுத்தமாக கழுவிட்டு 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாத்ரூம் கிளீன் செய்ய கஷ்டமா இருக்கிறதா.! அப்போ இதை ஒரு ட்ரை பண்ணி பாருங்க..

பிறகு அந்த அரிசி வேகும் அளவிற்கு ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசி வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். பிறகு ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெயை ஊற்றவும்.

பின் அவற்றில் ஊறவைத்த அரிசியை அவற்றில் சேர்க்கவும்.

பின்பு குக்கரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றவும், பின் அந்த பாத்திரத்தை குக்கரின் உள்ளே வைத்து குக்கரை மூடி விசில் போட்டு 5 நிமிடம் வேகவைத்து எடுத்தால் போதும் அரிசி வெந்துவிடும்.

ஒருவேளை இன்னுகொஞ்ச நேரம் வேக வேண்டும் என்றால் மீண்டும் குக்கரை முடி 5 நிமிடம் வேகவைத்து எடுத்துருக்கொள்ளுங்கள்.

இப்படி சாதத்தை வேகவைக்கும் போது அடுப்பில் சாதம் வேகவைப்பது போல் கஞ்சியோடு சாதம் இருக்கும். ஆக கஞ்சியை வடிகட்டிக்கொள்ளுங்கள், அவ்வளவு தான் பிரண்ட்ஸ் இப்படி ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள். அதன் பிறகு இந்த டிப்ஸை மட்டும் தான் பாலோ செய்வீர்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இனி பிரிட்ஜை திறந்தாலே வாசம் மட்டும் தான் வரும்..! அதற்கு இந்த 2 பொருள் மட்டும் போதும்..!

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement